சாமுண்டீஸ்வரி புடவையில் பற்றிய தீ.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.!

சென்னை: கோவிலில் பரமேஸ்வரியை பார்த்த சாமுண்டீஸ்வரி, ஆத்திரத்தில் ஆத்தா காளி, என்ன மறுபடியும் கொலைகாரியா ஆக்கிவிடாதே என்று கத்துகிறாள். இதை பார்த்த பரமேஸ்வரி, கோபப்படாதே? நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு, எனக்கு என் பையன பாக்கணும் என்று சொல்ல, என்னது பையன பாக்கணுமா? இப்படி தானே எங்க அம்மா அன்னைக்கு உங்ககிட்ட கெஞ்சுனாங்க. அப்ப நீங்க ஒரு நிமிஷம் எங்க அம்மாவ பத்தி யோசித்து இருந்தீங்கன்னா எங்க அம்மா இறந்து இருக்க மாட்டாங்க நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க மகன நீங்க பார்க்கவே முடியாது. அதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற தண்டனை. நீங்க அனாதை பிணமாதான் சாவீங்க என்கிறாள்.

இதையடுத்து, கார்த்திக் பெரியவங்க அவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறாங்க இத்தனை வருஷமா, அப்பா அம்மாவை பிரிச்சி வெச்சிட்டீங்க, இதுக்கு மேலயும் உங்களுக்கு என்ன கோவம் அவங்கள நீங்க மன்னிச்சிடலாமே என்று கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் கேட்க, அம்மா இல்லாம நான் எப்படி கஷ்டப்பட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அதே கஷ்டத்தை அவங்க பட வேண்டும் என்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் தூங்க சென்றுவிட ரேவதி அவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட சொல்கிறாள். நீங்களும் எங்க வீட்ல ஒருத்தர் தான் நீங்க சாப்பிடாம இருந்தா எப்படி இருக்கும் சாப்பிடுங்க என்று சொல்ல கார்த்தி உங்களுக்கு தேவைனா உங்க வீட்ல ஒருத்தன் இல்லன்னா யாரோ என்று சொல்லுவீங்க, என்று கேள்வி கேட்க இனிமே அப்படி சொல்ல மாட்டேன். சாப்பிடுங்க, நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான் என பதில் சொல்கிறாள். துர்காவும் அவளது பங்குக்கு ஆம்லெட் ஒன்றை போட்டு வந்து கொடுத்து சாப்பிட சொல்கிறாள். கார்த்திக் இவங்களுக்கெல்லாம் நான் யார் என்று உண்மை தெரிஞ்சா என்ன நடக்குமோ என யோசிக்கிறான்.

புடவையில் பற்றிய தீ: அடுத்த நாள் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை பார்த்து உங்களுக்கு உங்க கணவர் ராஜராஜன் உங்களை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா கூட போயிட்டு வாரோனு பயம் வந்துடுச்சு என்று சொல்ல சாமுண்டீஸ்வரியின் மகள்கள் அப்பா ஒரு காலமும் அம்மாவை விட்டுட்டு போக மாட்டாரு என பதில் கொடுக்கின்றனர். இதைத்தொடர்ந்து ரேவதி ஸ்வாதி மற்றும் சந்திரகலா என மூவரும் பூஜை அறையில் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய வருகிறாள். அவள் பூஜை அறைக்குள் வந்ததும் மற்றவர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.

சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய தொடங்கிய நேரத்தில் சந்திரகலா யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்து சாமுண்டீஸ்வரி புடவையை தீப்பற்ற வைத்து விட்டு நைசாக வெளியே வந்து வேடிக்கை பார்க்க தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X