காவல் தெய்வம் உங்களுக்கு துணையாக இருக்கும்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.!
சென்னை: கோவிலில் நடந்த விஷயத்தால், சாமுண்டீஸ்வரி வருத்தத்தில் இருக்க வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்கிறாள். இதைத்தொடர்ந்து ரேவதி, ஸ்வாதி மற்றும் சந்திரகலா என மூவரும் பூஜை அறையில் பூஜை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய வருகிறாள். அவள் பூஜை அறைக்குள் வந்ததும் மற்றவர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.
சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய தொடங்கிய நேரத்தில் சந்திரகலா யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்து சாமுண்டீஸ்வரி புடவையை தீப்பற்ற வைத்து விட்டு நைசாக வெளியே வந்து வேடிக்கை பார்க்க தொடங்குகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி பூஜையறைக்குள் இருக்க, அவளின் துணி பற்றி எரிகிறது. ஏதோ கருகும் வாசனை வருவதை உணர்ந்த சாமுண்டீஸ்வரி, ஒரு கட்டத்தில் தனது புடவை பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி அலறி அடித்து சத்தம் போட சந்திரகலாவே ஓடி வந்து தீயை அணைத்து நல்லவள் வேஷம் போடுகிறாள். உடனே இந்த வீட்டில் நடப்பது எல்லாம் எனக்கு சரியாக படவில்லை. எல்லாமே தப்பு தப்பா நடக்குது. எனக்கு என்னமோ கார்த்திக் தம்பி வந்ததுக்கு அப்புறம் தான் இப்படியெல்லாம் நடக்குதோன்னு சந்தேகமா இருக்கு என்று சொல்லி சாமுண்டீஸ்வரி மனதுக்குள் சந்தேகத்தை கிளப்ப முயற்சி செய்கிறாள்.
பின்னால் இருக்கும் காவல் தெய்வம்: எதற்கும் நாம ஒரு ஜோசியரை பார்த்து வீட்டுக்கு யாரால் பிரச்சனை வருகிறது என்று பார்க்கலாம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரியும் சரி வர சொல் என்கிறாள். இதையடுத்து,சந்திரகலா, ஜோசியர் ஒருவரை பார்த்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி எல்லாத்துக்கும் காரணம் கார்த்திக் தான் என்று சொல்லும்படி, பணத்தைகொடுத்து ஏற்பாடு செய்து, வீட்டிற்கு அழைத்து வருகிறாள். வீட்டிற்கு ஜோசியர் வந்ததும் மீண்டும் நடந்த விஷயங்களை சொல்கிறாள். வீட்டில் உள்ள எல்லாரும் கூடி நிற்கின்றனர். கார்த்திக் சாமுண்டீஸ்வரி பின்னாடி நிற்கிறான். ஜோசியக்காரர் உங்களை சுத்தி வஞ்சகம் நிறைந்து இருக்கு. ஆனால் உங்களுக்கு பின்னாடியே உங்க காவல் தெய்வம் இருக்கு. அதை மட்டும் விட்டுடாதீங்க, அந்த காவல் தெய்வம் இருக்கும் வரை உங்களுக்கு ஒண்ணுமே ஆகாது என்று சொல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள்.'
ரேவதிக்கு கல்யாண யோகம்: அதன் பிறகு ஜோசியர் எல்லாருடைய ஜாதகத்தையும் வாங்கி பார்க்கிறார். ரேவதியின் ஜாதகத்தை பார்த்து விட்டு இந்த ஜாதகத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சா பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார். ஜோசியர் சொன்னதை கேட்ட ரேவதி அப்செட்டாகி உள்ளே சென்று விட ஸ்வேதாவை அனுப்பி ரேவதியை அழைத்து வர சொல்கிறாள் சாமுண்டேஸ்வரி. ரேவதியை சுவாதி வற்புறுத்தி அழைத்து வர ரேவதி டல்லாக இருப்பதை பார்த்த சாமுண்டேஸ்வரி என்னாச்சு என்று கேள்வி எழுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











