கார்த்தியை ஏமாற்றும் பெண்.. அதிர்ச்சியில் தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், சிதம்பரத்திடம் போட்ட சவாலில் ஜெயிக்க, கார்த்திக் பல்லவியை பாட வைக்க திட்டம் போடுகிறான்,
இதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா, சிதம்பரத்திடம் சென்று கார்த்திக்கை குறைவா எடை போடாதீங்க, அவன் கிட்ட பல்லவினு ஒரு பாடகி இருக்கா. அவ பாடினா நீங்க தோத்து தான் போவீங்க என்று சொல்லி சிதம்பரத்தை உசுப்பேத்துகிறார்.
இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: ஐஸ்வர்யா, ரூபஸ்ரீயையும் கோகிலாவையும் சந்தித்து கார்த்திக்கிடம் பல்லவி தான் தீபா என்ற விஷயத்தை உடைத்து விடலாம் என சொல்ல அவள் ஏன் சொல்லணும்? அப்படி சொன்னா நிறைய பிரச்சனைகள் வரும் என சொல்கிறாள். ஆனால் ஐஸ்வர்யா நீ தப்பிக்க இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி இது தான் என்று சொல்ல அவளும் ஓகே சொல்கிறாள்.
ஐஸ்வர்யா போடும் பிளான்: அடுத்ததாக கார்த்திக்கிற்கு போன் செய்து பல்லவியை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க போறேன், அவங்களும் உங்களை பார்க்கணும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல கார்த்திக்கும் ஓகே சொல்கிறான். மறுநாள் காலையில் தீபா வீட்டில் இருந்து காணாமல் போக மீனாட்சி, கார்த்திக்கிடம் தீபா ஆபிஸ் போனதாக சொல்கிறாள்.

கார் ஓட்டும் தீபா: சனி, ஞாயிறு ஆபிஸ் இல்லையே என்று யோசிக்கும் கார்த்திக் தீபாவை தேடி கிளம்ப, மறுபக்கம் தீபா கார் ஓட்ட கற்றுக் கொள்ள வந்திருக்கிறாள். தீபாவுக்கு பயிற்சி கொடுக்க வந்த அசின் எப்படி ஓட்ட வேண்டும் என சொல்லி தராமல் ஓட்ட சொல்ல தீபா காரை மூவ் பண்ணதும் ஆப் ஆகி விடுகிறது. இதனால் தீபாவை திட்ட அங்கு வரும் கார்த்திக் முதலில் நீங்க எப்படி ஓட்டணும்னு ஒட்டி காட்டி சொல்லி கொடுத்து இருக்கனும் என சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.
அதன் பிறகு அசின் அப்படினா நீங்க ஓட்ட சொல்லி கொடுங்க என்று சொல்ல கார்த்திக் தீபாவுக்கு கார் ஓட்ட சொல்லி கொடுக்கிறான் கார்த்திக். பிறகு ரூபஸ்ரீ தீபாவுக்கு போன் செய்து கார்த்திக்கிடம் பல்லவி நீ தான் என்ற உண்மையை சொல்லி விட போறேன் என்று சொல்கிறாள். நாளைக்கு நான் சொல்லும் இடத்திற்கு வர சொல்கிறாள்.
இந்த வாரம் செம ட்விஸ்ட்: மறுநாள் கார்த்திக் ஒரு காபி ஷாப்பிற்கு வர தீபாவும் அங்கு வர ரூபஸ்ரீ தீபாவிடம் பேசி கொண்டிருக்கும் போது கார்த்திக்கிடம் வரும் ஒரு பெண், நான் தான் பல்லவி என அறிமுகமாகிறாள். அதை பார்த்து தீபா ஷாக்காக ரூபஸ்ரீ இப்போ போய் நான் தான் பல்லவினு சொல்லு பார்க்கலாம் என ஷாக் கொடுக்கிறாள். இதனால் தீபா வேகவேகமாக வந்து கார்த்திக்கிடம் நான் தான் பல்லவி, அவ பொய் சொல்கிறாள் என்ற உண்மையை உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











