தீபாவுக்கு எதிராக நடந்த சதி.. கார்த்திகை தீபம் இன்றைய தின எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று, கார்த்திக் தீபாவின் கச்சேரி குறித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்ட அதை பார்த்து தர்மலிங்கம் ஆனந்த கண்ணீர் விட்டு கார்த்திக்கிற்கு நன்றி கூறுகிறார். இதையடுத்து, இன்றும் நாளையும் நடக்க போவது என்பதை பார்க்கலாம்.

இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், போஸ்டரை பார்த்து கடுப்பாகும் ரூபஸ்ரீ இந்த தீபாவை பாடவே விட கூடாது என முடிவு செய்து நேராக போலீசை கூப்பிட்டு கொண்டு, தீபாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று இவர்கள் பொண்ணை பாட வைப்பதாக சொல்லி 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்காங்க, அதை கொடுத்தால் தான், இந்த கச்சேரி நடக்கணும் என்று சொல்ல இவர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்டாக தர்மலிங்கம் 10 லட்சம் ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுக்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial february 10th episode

பணம் கொடுத்த கார்த்திக்: உடனே தர்மலிங்கம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாச்சு, அதை வாங்கிட்டோம்னு எழுதி கொடுக்க சொல்லுங்க என்று செக்மேட் வைக்க போலீஸ் இருப்பதால் வேறு வழியின்று எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள் ரூபஸ்ரீ. இதைஅடுத்து, தீபா பணம் எப்படி வந்தது என்று கேட்க கார்த்திக் மாப்பிள்ளை தான் இப்படியெல்லாம் பிரச்சனை நடக்க வாய்ப்பிருக்குனு சொல்லி பணத்தை கொடுத்தாரு என்று சொல்கிறார்.

எல்லாமே டிராமா: அடுத்ததாக, அனைவரும் சாப்பிட உட்கார தீபா பரிமாற அபிராமிக்கு சாப்பாடு வைக்க போகும் போது அவள் நானே பரிமாறிக்கிறேன் என்று சொல்கிறாள். தீபாவுக்கு கல்யாண வீட்டில் வைத்து அபிராமி சொன்ன வாரத்தை நினைவுக்கு வருகிறது. பிறகு திடீரென ஐஸ்வர்யா வாந்தி எடுத்து மயங்கி விழ டாக்டர் வந்து பரிசோதனை செய்து விட்டு மூன்று மாதம் கர்ப்பம் என்று சொல்ல வீட்டில் உள்ள அனைவரும் சந்தோசப்படுகின்றனர். அந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க அபிராமி நீங்க வந்த நேரம் என்று ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி சந்தோசப்படுகிறார். இதனையடுத்து ஐஸ்வர்யாவும் அவளது அம்மாவும் பேசும் போது இது அனைத்தும் டிராமா என்பது தெரிய வருகிறது.

zee tamil television Karthigai Deepam serial february 10th episode

தூண்டிவிடும் ஐஸ்வர்யா: அடுத்து கார்த்திக்கும் தீபாவும் ரூமுக்குள் இருக்கும் போது கார்த்திக் நீ பாடுறதுல மட்டும் கவனத்தை செலுத்துங்க என்று சொல்ல தீபா ஒரு காதல் பாடலை கார்த்திக்கிற்கு பாட இந்த நேரத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் அபிராமி, பாட்டை கேட்டு கடுப்பாகுகிறாள். ஐஸ்வர்யா இதையே சாக்காக வைத்து அபிராமியை ஏற்றி விடுகிறாள். அதே போல் தீபாவுக்காக கார்த்திக் பணம் கொடுத்த விஷயத்தை சொல்லி தீபா மீது மேலும் வன்மத்தை துண்டுகிறாள்.

பக்கா பிளான் போடும் ஐஸ்வர்யா: அதன் பிறகு தீபா பாட கூடாது, எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐஸ்வர்யா, மாயா மற்றும் ரூபாஸ்ரீ ஆகியோர் கூட்டு சேர்ந்து ஒரு பிளானை போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன எனபதை பார்க்க கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X