அண்ணியுடன் மகேஷ் கள்ள உறவு.. உண்மையை சொன்ன கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: கார்த்திக் மீண்டும் பஞ்சாயத்தை கூட்டி, நான் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கையில் தாலியை எடுக்க, அந்த பெண் பதறிப்போய், அய்யோ கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். அப்போது அங்கு இருப்பவர்கள் இந்த பையன் நல்ல பையனாக தான் இருக்கிறான். நீதானே வாழ்க்கையை கெடுத்து விட்டான் என்று சொன்ன, இவனையே கல்யாணம் செய்து கொள் என அனைவரும் அந்த பெண்ணை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த அந்தப் பெண்ணின் காதலன் எங்களை மன்னித்து விடுங்கள், நான் தான் இந்த பெண்ணின் காதலன், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறோம். எங்கள் திருமணத்திற்கு பணம் வேண்டும் என்பதற்காக நாங்கள் சிவானாண்டியிடம் சென்றோம். சிவானாண்டி தான் கார்த்திக் மீது பழி போட்டால் இருபதாயிரம் ரூபாய் தருவதாக சொன்னார் என்று உண்மையை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீர்ப்பு சொல்லிய ஆளவந்தான், கடுப்பாகி சிவானாண்டி, நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா, ஒரு குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு அறியா பையன் மேல இப்படி ஒரு பழிய போட்டு இருக்க, இதெல்லாம் உனக்கு நல்லா இருக்கா, என்று சிவனாண்டியை திட்ட அவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான். இதை அடுத்து, சாமுண்டீஸ்வரி இவனை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது, இவனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட வேண்டியதுதான் என்று சொல்ல, மயில்வாகனம் போலீசுக்கு போன் செய்ய, போலீசார் வந்து சிவனாண்டியை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

ஆத்திரத்தில் சந்திரகலா: அப்போது சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கிடம் என்னை மன்னித்துவிடு டிரைவர், நான் உன்னை தவறாக நினைத்து விட்டேன் ஒரு பக்கம் எனக்கு நீ, இந்த தவறை செய்திருக்க மாட்டாய் என்று தெரிந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து நான் உன்னை குற்றவாளி என நினைத்து விட்டேன். என்னை மன்னித்துவிடு என்கிறாள். இதையடுத்து கார்த்தி, அதெல்லாம் பரவாயில்லை மேடம், ஆனால் அந்தப் பெண் என் மீது சொன்ன பழியை நினைத்து தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து சந்திரகலா, என் கணவரையே போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டு, மறுபடியும் இந்த வீட்டுக்குள்ளேயே வந்துட்டியா என மீண்டும் கோபத்தில் இருக்கிறாள்.

கள்ள உறவு: ராஜராஜன் கார்த்திக்கிடம் வந்து கட்டிப்பிடித்து மாப்பிள்ளை என்று பேசுகிறார். அப்போது கார்த்திக் மாமா, கொஞ்சம் அமைதியாக இருங்கள், இப்போது நாம் உறவுமுறை என்னவென்று தெரிந்துவிட்டால் பின் பிரச்சனையே பெரிதாகிவிடும். என்னை வீட்டை விட்டு அனுப்பி விடுவார்கள். அதனால் உங்களுடைய பாசத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தி வையுங்கள். முதலில் நாம் ரேவதியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்ல ராஜராஜன் அதிர்ச்சி அடைந்து, ஏன் ரேவதியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்க, மாயாவும் மகேஷும் நல்லவர்கள் இல்லை, மாயா மகேஷ் இருவருமே கள்ள தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

மாயா மகேஷால் பலமுறை கருவுற்று அதை அபார்ஷனும் செய்திருக்கிறாள்.அந்த உண்மை தெரிந்த ஒரே டாக்டர் மல்லிகா. அதனால்தான் மல்லிகாவிற்கு விபத்தை ஏற்படுத்தி அவர்களை பார்க்க முடியாதபடி செய்துவிட்டாள் என்று கார்த்திக் சொல்ல ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X