கடவுள் முருகன் கொடுத்த வாக்கு.. கார்த்திக், ரேவதி திருமணம் நடக்குமா? கார்த்திகை தீபம் !

சென்னை: பஞ்சாயத்து முடிந்ததும் சாமுண்டீஸ்வரி டிரைவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வேலைக்கு வரும் படி அழைக்கிறாள். இதையடுத்து ராஜராஜன் கார்த்திக்கை கட்டிப்பிடித்து மாப்பிள்ளை என்று பேச, அப்போது கார்த்திக் மாமா, கொஞ்சம் அமைதியாக இருங்கள், இப்போது நாம் உறவுமுறை என்னவென்று தெரிந்து விட்டால் பின் பிரச்சனையே பெரிதாகிவிடும். என்னை வீட்டை விட்டு அனுப்பி விடுவார்கள். அதனால் உங்களுடைய பாசத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தி வையுங்கள். முதலில் நாம் ரேவதியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்ல ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறான்.

மாயாவும் மகேஷும் நல்லவர்கள் இல்லை, மாயா மகேஷ் இருவருமே கள்ள தொடர்பு வைத்திருக்கிறார்கள்.
மாயா மகேஷால் பலமுறை கருவுற்று அதை அபார்ஷன் செய்திருக்கிறாள். அந்த உண்மை தெரிந்தவர் டாக்டர் மல்லிகா தான். மல்லிகாவிற்கு இப்போது கண் தெரியவில்லை சரியான ஆதாரம் கிடைக்கும் வரை காத்து இருப்போம் என்கிறான்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், மயில்வாகனம் ராஜராஜனிடம், ரேவதி மகேஷ் திருமணம் நடக்கவே கூடாது அவர்கள் கெட்டவர்கள் என்பது தெரிந்து விட்டது. எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் திருமணமும் நின்று விடக்கூடாது அதற்காக நான் ஒரு ஐடியாவை வைத்திருக்கிறேன். நம்ம குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக கார்த்திக் மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றான். இதனால் ரேவதியை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்கிறான். உடனே ராஜராஜன் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சாமுண்டீஸ்வரி இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்று சொல்ல, அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் தான் செய்ய வேண்டும் அப்போதுதான் நம்ம ரெண்டு குடும்பமும் நன்றாக இருக்கும் என்று இருவரும் பேசி ஒரு திட்டம் போடுகின்றனர்.

மாயா போடும் பிளான்: மறுபக்கம் மாயா, கார்த்திக்கை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என்று எத்தனை திட்டங்கள் போட்டாலும், அது தோல்வி அடைந்து விடுகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை இப்படியே சென்றால் ரேவதி உனக்கு கிடைக்க மாட்டாள் என புலம்புகிறாள். உடனே, மகேஷ், ரேவதி கிடைக்கவில்லை என்றால் சொத்தும் கிடைக்காது, அப்போ நம்ம நிலைமை என்ன ஆகும் என்று சொல்ல, அப்போது மாயா அத பத்தி நீ கவலைப்படாதே, கண்டிப்பா உனக்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடக்கும். ஆனால், அது உன் கையிலதான் இருக்கு, நீ ரேவதிய பார்க்கும்போதெல்லாம் கார்த்திக்கை பத்தி தப்பு தப்பா சொல்லிக்கிட்டே, இரு அப்பதான் நம்மளை பத்தி கார்த்தி சாமுண்டீஸ்வரி கிட்ட சொன்னாலும் ரேவதி நம்ப மாட்டாள் என்று சொல்ல அவனும் சரி என்கிறான்.

சிறையில் சிவனாண்டி: காவல் நிலையத்தில் சிவனாண்டியை வெளியில் எடுப்பதற்காக வழக்கறிஞர் வர, அப்போது இன்ஸ்பெக்டர், சிவனாண்டி மீது எஃப்.ஐ.ஆர் போட்டாச்சு, இனி எதுவுமே செய்ய முடியாது. நீங்கள் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வழக்கறிஞர் அதற்குள் எப்படி அவர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டீர்கள், அவர் நிரபராதி என்று சொல்ல, அவர் நிபராதியா இல்லையா என்பதை கோர்ட் சொல்லட்டும் என்று சொல்ல, வழக்கறிஞர் வேறு வழியே இல்லாமல் வெளியில் வருகிறார்.

ரேவதி, கார்த்திக் திருமணம்: பின், ராஜராஜன் கோவிலில் அம்மாவை சந்தித்து, நீங்க நாளைக்கு வீட்டுக்கு வந்து ரேவதியை கார்த்திக்கிற்கு பெண் கேளுங்கள் என்று சொல்ல, பரமேஷ்வரி என்னப்பா சொல்ற, இதெல்லாம் சரியா வருமா என்னை பார்த்தாலே சாமுண்டீஸ்வரி கோவப்படுவா நான் எப்படி வந்து பெண் கேட்பது என்று கேட்க, அம்மா, அதெல்லாம் பாத்துக்கலாம், இத்தனை வருஷமா நான் அவளுக்காகத்தான் உங்களைக்கூட பார்க்காமல் இருந்தேன். என்னால் பிரிந்த குடும்பம் என் மகளால் மீண்டும் சேர வேண்டும், நாளைக்கு ஊர்கார்களோட வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X