தீபாவுக்காக ரவுடிகளிடம் மல்லு கட்டும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஐஸ்வர்யா வாந்தி எடுத்து மயங்கி விழ டாக்டர் வந்து பரிசோதனை செய்து விட்டு, ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். இதனால், வீட்டில் உள்ள அனைவரும் சந்தோசப்படுகின்றனர். அந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க அபிராமி நீங்க வந்த நேரம் என்று ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறாள்.
அடுத்து கார்த்திக்கும் தீபாவும் ரூமுக்குள் இருக்கும் போது கார்த்திக் நீ பாடுறதுல மட்டும் கவனத்தை செலுத்துங்க என்று சொல்ல தீபா ஒரு காதல் பாடலை கார்த்திக்கிற்காக பாட அந்த நேரத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் அபிராமி, பாட்டை கேட்டு கடுப்பாகுகிறாள். ஐஸ்வர்யா இதையே சாக்காக வைத்து அபிராமியை ஏற்றி விடுகிறாள். அதே போல் தீபாவுக்காக கார்த்திக் பணம் கொடுத்த விஷயத்தை சொல்லி தீபா மீது மேலும் வன்மத்தை துண்டுகிறாள். அதன் பிறகு தீபா பாட கூடாது, எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐஸ்வர்யா, மாயா மற்றும் ரூபாஸ்ரீ ஆகியோர் கூட்டு சேர்ந்து போஸ்டரை கிழிக்க பிளான் போடுகின்றனர்.

ரவுடிகளிடம் சண்டை: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ரவுடிகள் போஸ்டரை கிழித்து கொண்டிருக்க இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் எதுக்கு போஸ்டரை கிழிக்கறீங்க என்று கேட்க அவனையும் அடித்து விடுகின்றனர். உடனே இளையராஜா கார்த்திக்கிற்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். அபிராமிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இதை வீடியோ எடுத்து அபிராமிக்கு அனுப்பி என்ன உன் பையன் இப்படி சண்டை போடுறான் என்று கேட்கிறாள்.

கார்த்திக்கிற்கு எதுக்கு இந்த வேலை? இதனால் அபிராமி இதை அவமானமாக நினைத்து அருணாசலத்திடம் கார்த்திக்கிற்கு எதுக்கு இந்த வேலை? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான் என சொல்லி வருத்தப்பட்டு தீபாவை திட்ட கண் கலங்குகிறாள். பிறகு கார்த்திக் மீண்டும் அனைத்து இடங்களிலும் போஸ்டரை ஒட்ட சொல்ல போஸ்டர் ஒட்டியவர்கள் வேறு இடத்தில் வேலை இருப்பதால் வர முடியாது என சொல்லி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











