கார்த்திக்கை சிக்க வைக்க நடந்த சதி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் கச்சேரி நடத்த ஏற்பாடு நடைபெற்ற நிலையில், சபாவின் மேனேஜர் இங்கு பாட்டுக் கச்சேரி நடத்த முடியாது, பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால் பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களை கூப்பிட்டு சபா முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவ ஐஸ்வர்யா அபிராமியிடம் காட்ட அபிராமி கார்த்திக் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கணும் என்று கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 14th episode

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம், கார்த்திக் ஆபிசில் இருக்கும் போது ரூபஸ்ரீ மற்றும் கோகிலா என இருவரும் உள்ளே வருகின்றனர். இவர்கள் வருவதை சிசிடிவி கேமராவில் பார்த்து விடும் கார்த்திக் அவர்களை உள்ளே விட சொல்கிறான், பிறகு உள்ளே வந்த இவர்கள் அப்படியே நல்லவர்கள் போல பேசி நடிக்கின்றனர்.

கார்த்திக் நீங்க தானே கச்சேரியை நடக்க விட கூடாதுனு பிளான் போட்டது என்று கேட்க நாங்க எதுக்கு அப்படி பண்ணனும் நாங்க இல்ல என்று சமாளிக்கின்றனர். பிறகு சரி தர்மலிங்கம் வீட்டிற்கு போய் ஏன் பணத்தை கேட்டீங்க என்று கேட்க அவங்க கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டோம். கொடுத்துட்டாங்க என்று சொல்லி சமாளிக்கின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial february 14th episode

பிறகு ரூபாஸ்ரீ இங்கும் அங்கும் சுற்றி பார்த்து விட்டு பாத்ரூம் எங்கே என்று கேட்டு உள்ளே சென்று கையில் எடுத்து வந்திருந்த பணப்பையை வைத்து வெளியே வந்து இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்டிற்கு தகவல் கொடுக்கின்றனர். அவர்கள் சோதனையிட கார்த்திக் ஆபிஸ்க்கு வருகின்றனர். வெளியே போன கோகிலா மற்றும் ரூபாஸ்ரீ மீண்டும் உள்ளே வருகின்றனர்.

ஆபிஸ் முழுவதும் பணத்தை தேட எங்கும் எதுவும் கிடைக்காத நிலையில் இவர்கள் பாத்ரூமில் தேடி பார்க்க சொல்ல பிறகு அங்கும் தேடி பார்க்கின்றனர், பிறகு நீங்க இங்க எல்லாம் வர கூடாது என்று ரூபாஸ்ரீ மற்றும் கோகிலாவை வெளியே துரத்தி விடுகின்றனர். எங்கும் பணம் கிடைக்கவில்லை தவறான தகவல் வந்ததாக சொல்லி வெளியே கிளம்புகின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial february 14th episode

பிறகு கார்த்திக் கோகிலா வீட்டிற்கு வந்து ஒரு கவரை கொடுத்து உங்க பணத்தை உங்க அக்கவுண்ட்லயே போட்டுட்டோம் என்று ஷாக் கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X