ருத்ரதாண்டவம் ஆடிய சாமுண்டீஸ்வரி.. துப்பாக்கி முனையில் மாயா, மகேஷ். கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: பரமேஸ்வரி பாட்டி, வீட்டுக்கு வந்து பெண் கேட்டதால், குழப்பம் அடையும் ரேவதி,பரமேஸ்வரி பாட்டியை சந்திப்பதற்காக கார்த்திக்கிடம் உதவிகேட்கிறாள். கார்த்திக் பாட்டியை கோவிலுக்கு வர சொல்லி, ரேவதியை கோவிலில் டிராப் செய்து விட்டு கிளம்பி விடுகிறான். அப்போது, பரமேஸ்வரி பாட்டியை சந்தித்த ரேவதி,இந்த குடும்பம் ஒன்னு சேரனும்னு தான் எனக்கும் ஆசை. ஆனால், நிச்சயதார்த்தம் ஆன என்னை பெண் கேக்கிறது எப்படி பாட்டி சரியா இருக்கும் என கேள்வி கேட்கிறாள்.
இப்படி இருவரும் பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து சாமுண்டீஸ்வரி, தனது தோழிகளுக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லி கார்த்திக்கை அழைத்து கொண்டு இதே கோவிலுக்கு வருகிறாள். ரேவதி பரமேஸ்வரி பாட்டியுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி, ரேவதியை பளார் என்று அறைந்து அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வரும் சாமுண்டீஸ்வரி, ரேவதியை திட்ட, அவள், நான் விருப்பப்பட்டு தான் பாட்டியை பார்க்க சென்றதாக பதில் கொடுக்கிறாள். அப்போது,இந்த அம்மாவைவிட உனக்கு பாட்டி முக்கியமா போச்சா,அவங்களால் தான் இன்னைக்கு நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என்று சொல்லி வருத்தப்பட, அம்மாவுடன் சேர்ந்து ரோகிணியும் ரேவதியை திட்டுகின்றனர்.அப்போது, கடைசி பெண் சுவாதி மட்டும், என்னையும் கூட்டிட்டுபோய் இருக்கலாம் நானும் பாட்டியை பார்க்க வந்திருப்பேன் என்று ஆறுதல் சொல்கிறாள்.
உண்மை தெரிந்தது: அதனை தொடர்ந்து டாக்டர் மல்லிகாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு கடந்த 1 மாதமாகிவிட்டதால், கட்டு போட்டு இருந்த நிலையில் தற்போது டாக்டர் ஒருவர் வீட்டிற்கு வந்து மல்லிகாவின் கட்டை அவிழ்க்க மல்லிகா டாக்டருக்கு மீண்டும் பார்வை சரியாகிவிடுகிறது. இதையடுத்து, மல்லிகா கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்துவிட்டு வரலாம் என்று கோவிலுக்கு கிளம்புகிறாள். அதை கோவிலுக்கு மகேஷ் மற்றும் மாயா தெரிந்தவர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்து கொண்டிருப்பதை மல்லியா டாக்டர் பார்த்துவிட்டு என்ன என்று விசாரிக்க, ரேவதியை மகேஷ் கல்யாணம் செய்ய இருக்கும் உண்மை தெரியவருகிறது.
ருத்ரதாண்டவம் ஆடிய சாமுண்டீஸ்வரி: உண்மை தெரிந்த மல்லிகா, உடனே சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு கோவிலுக்கு வர சொல்லி மாயா, மகேஷ் குறித்தும் அவர்களுக்குள் இருக்கும் கள்ளத்தொடர்பு குறித்து சொல்கிறாள். மேலும் நான் மாயாவிற்கு பலமுறை அபார்ஷன் செய்து இருக்கிறேன் என்று உண்மையை போட்டு உடைக்க சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். உடனே வீட்டுக்கு வரும் சாமுண்டீஸ்வரி, ரேவதியிடம் அந்த மாயா, மகேஷ் இருவரும் ரொம்ப மோசமானவங்க, அவங்க ரெண்டு பேருக்கும் இடையே தப்பான உறவு இருக்கு, மாயாவிற்கு மல்லிகா டாக்டர் தான் பலமுறை அபார்ஷன் பண்ணி இருக்காங்க, இந்த விஷயத்தை மல்லிகா டாக்டர் தான் என்னிடம் சொன்னாங்க.
என் குடும்பத்துக்குள்ளயே வந்து என்னை ஏமாற்றி, உன்னை கல்யாணம் பண்ணி இந்த சொத்தை அடைய திட்டம் போட்டு இருக்காங்க., இது மேலும், நான் அவங்க ரெண்டு பேரையும் விடமாட்டேன் என்று துப்பாக்கியை கையில் எடுத்து சாமுண்டேஸ்வரி நேரகா மாயா வீட்டிற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











