மகேசை சுட்டுத்தள்ளிய சாமுண்டீஸ்வரி.. ரேவதியின் திருமணம் நடக்குமா? கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கண்ணில் பட்ட காயம் சரியானதைத் தொடர்ந்து மல்லிகா கோவிலுக்கு வர, அங்கு கல்யாண போஸ்டரைப் பார்த்த மல்லிகா டாக்டர், சாமுண்டீஸ்வரிக்கு ஃபோன் போட்டு கோவிலுக்கு வர சொல்லி மாயா, மகேஷ் குறித்தும் அவர்களுக்குள் இருக்கும் கள்ளத்தொடர்பு குறித்தும் சொல்கிறாள். மேலும் நான் மாயாவிற்கு பலமுறை அபார்ஷன் செய்து இருக்கிறேன் என்று உண்மையை போட்டு உடைக்க சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
கோவத்துடன் வீட்டுக்கு வரும் சாமுண்டீஸ்வரி, ரேவதியிடம் அந்த மாயா, மகேஷ் இருவரும் ரொம்ப மோசமானவங்க, அவங்க ரெண்டு பேருக்கும் இடையே தப்பான உறவு இருக்கு, மாயாவிற்கு மல்லிகா டாக்டர் தான் பலமுறை அபார்ஷன் பண்ணி இருக்காங்க,இந்த விஷயத்தை மல்லிகா டாக்டர் தான் என்னிடம் சொன்னாங்க என்று சொல்லி துப்பாக்கியை எடுத்து கொண்டு மாயாவின் வீட்டிற்கு வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்னைய எபிசோடில், கையில் துப்பாக்கியுடன் சாமுண்டீஸ்வரியை பார்த்து பயந்து போன மாயா, என்ன மேடம்,என்ன ஆச்சு என்று கேட்க. என் குடும்பத்துக்குள்ளயே வந்து என்னை ஏமாற்றி, என் பொண்னை கல்யாணம் பண்ணி இந்த சொத்தை அடைய திட்டம் போட்டு இருக்காங்க, உனக்கு என்ன தைரியம் என்று கேட்க, பயந்துபோன மாயா, மேடம் யாரோ எங்களை பத்தி தப்பா சொல்லி இருக்காங்க மேடம், நாங்க எந்த தப்பும் பண்ணல எங்களை நம்புங்க என்று சொல்லி அழுது நாடகமாடுகிறாள். அதைப்பார்த்து மேலும் ஆத்திரம் அடைந்த சாமுண்டீஸ்வரி, என்னடி நாடகமாடுறியா... உங்க ரெண்டு பேரில் கதையை அந்த மல்லிகா டாக்டர் என்னிடம் சொல்லிட்டாங்க.
கொழுந்தனுடன் உறவா: கொழுந்தன், அண்ணினு நாடகமாடிக்கிட்டு இரண்டு பேரும் கள்ள உறவில் இருந்து இருக்கீங்க, இந்த இடத்தில் இருப்பதற்கே என் கால் கூசுது, சொத்துக்காக என்ன வேணுமானாலும் பண்ணுவீயா என்று மகேசை சுட்டுத்தள்ள துப்பாக்கியை எடுக்க, அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த கார்த்திக், சாமுண்டீஸ்வரியை தடுக்க, அவள் ஆத்திரத்தில் இவர்களை கொன்றால், தான் எனக்கு நிம்மதி என்று சொல்ல, இவங்களை கொன்றுவிட்டு நீங்க ஜெயிலுக்கு போக போறீங்களா, உங்களை நம்பி பசங்க இருக்காங்க, அவங்களை பாருங்க, இவங்களை போலீசில் பிடித்து கொடுத்துவிடலாம் என்று சொல்லி, இருவரையும் போலீசில் பிடித்து கொடுத்து விடுகின்றனர்.
ரேவதி திருமணம் நின்றது: இதையடுத்து, இருவரும் வீட்டுக்கு வர, ரேவதி என்ன ஆச்சு என்று கேட்க, அவங்களை சுட்டுத்தள்ளிவிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால், சரியான நேரத்திற்கு டிரைவர் வந்து, அவங்களை போலீசில் பிடித்து கொடுத்துவிட்டார் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ரேவதி கண்கலங்கி, அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று அழ அவளை ராஜராஜன் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி மகளின் திருமணத்தை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருக்க, அப்போது ராஜராஜன், இதோ பாரு சாமுண்டீஸ்வரி, ரேவதி அந்த மகேஸ் மீது ரொம்ப நம்பிக்கை வைத்து இருந்தாள், இப்போது அவன் எவ்வளவு மோசமானவன் என தெரிந்து நொந்து போய் இருக்கிறாள். இந்த நேரத்தில் நாமும் அவளை கட்டாயப்படுத்த வேண்டாம். ரேவதி மனசு மாற கொஞ்சம் டைம் கொடுப்போம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி அமைதியாக இருக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











