பல்பு வாங்கிய ஐஸ்வர்யா.. கோவில் தீர்த்தத்தில் மயக்க மருந்து.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் கச்சேரி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தீபா பாடுவதை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்று, ரூபஸ்ரீ ஒரு பிளானை போட்டு ஐஸ்வர்யாவிடம் மயக்க மருந்து மாத்திரையை கொடுத்து அனுப்புகிறாள். ஐஸ்வர்யா அதை கொண்டு வந்து அவளது அம்மாவிடம் கொடுக்கிறாள். பிறகு தீபாவுக்காக மீனாட்சி ஸ்பெஷலாக பாலை காய்ச்சி கொண்டிருக்கும் போது அபிராமி கூப்பிட மீனாட்சி வெளியே வர இந்த நேரம் பார்த்து கிச்சனில் நுழையும் ஐஸ்வர்யாவின் அம்மா அந்த மாத்திரையை பாலில் கலந்து விடுகிறாள்

மயக்க மருந்து கலந்த பாலை மீனாட்சி தீபாவுக்கு கொடுக்கிறாள். தீபாவும் பாலை குடிக்க போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் வருவதால், அதை அப்படியே வைத்துவிட்டுபோனில் பேசிக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 16th episode

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு: இதையடுத்து, இன்றைய எபிசோடில், தர்மலிங்கத்திடம் போன் பேசிவிட்டு தீபா மீண்டும் பாலை குடிக்க போக போகும் போது, கார்த்திக் உள்ளே வந்து என்ன தீபா குடிக்கிறீங்க என்று கேட்கிறான். கோல்டா இருப்பதால் அக்கா பால் காய்ச்சி எடுத்துட்டு வந்தாங்க என்று சொல்ல நீங்க அதெல்லாம் குடிக்க வேண்டாம் என்று கார்த்திக் சொல்கிறான். உடனே, தீபா ஏன் குடிக்க வேண்டாம்னு சொல்றீங்க என்று கேட்க நீங்க பாடுறதை தடுக்கிறதுக்காக நிறைய சதி நடக்குது பால்ல ஏதாச்சும் கலந்து கூட இருக்கலாம் வேண்டாம் என்று சொல்ல மீனாட்சியும், கார்த்திக் சொல்வதில் சரிதான் என்று சொல்ல தீபா பாலை குடிக்காமல் விட்டு விடுகிறாள். இதனால் ஐஸ்வர்யாவின் பிளான் ப்ளாப் ஆகிறது.

பிளாப் ஆன பிளான்: பிறகு கார்த்திக் தீபா ஆகியோர் கச்சேரிக்கு கிளம்பி அபிராமியை கூப்பிட அவள் ஐஸ்வர்யாவுடன் செக்கப் செல்வதாக சொல்கிறாள். மேலும் தன்னுடன் அருணாச்சலமும் வருவதால் அவரும் கச்சேரிக்கு வர முடியாது என சொல்லி விடுகிறாள். அருணை கச்சேரிக்கு கூப்பிட அவன் ஆபீஸில் முக்கியமான வேலை இருக்கிறது என்று கிளம்பிச் சென்று விட மீனாட்சியிடம் அண்ணி நீங்க வரிங்களா என்று கேட்க நான் இப்படி கண்டிப்பா வரேன் என்று சொல்ல மீனாட்சி கார்த்திக், தீபா ஆகியோர் கிளம்பி வருகின்றனர். கிளம்பும்போது தீபா அபிராமி மற்றும் அருணாச்சலத்துடன் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்ப அபிராமி தீபாவை கூப்பிட்டு நீ நல்லா பாடுவது எனக்கு தெரியும் ஆனால் இன்னைக்கு கோவிலில் விளக்கு போடணும் அதை மறந்துடாதே என்று சொல்லி அனுப்புகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial february 16th episode

தீர்த்தத்தில் மயக்க மருந்து: மறுபக்கம் கோவிலுக்கு வந்த தர்மலிங்கம் குடும்பம் முருகனிடம் தீபாவோட வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கணும், அவளுடைய ஆசை நிறைவேறனும் என்று வேண்டி தீர்த்தத்தை வாங்க இதை நோட்டமிட்ட ரூபஸ்ரீ தர்மலிங்கத்துக்கு தெரியாமல் அந்த தீர்த்தத்தில் மயக்க மாத்திரையை கலந்து விடுகிறாள். கோவில் தீர்த்தம் என்பதால் தீபா மறுப்பு தெரிவிக்காமல் கண்டிப்பாக குடிப்பா.. அதனால வாந்தி மயக்கம் வந்து பாட முடியாமல் போய்விடும் என கணக்கு போடுகிறாள் ரூபஸ்ரீ.

zee tamil television Karthigai Deepam serial february 16th episode

பிறகு இவர்கள் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வர தீபா கச்சேரிக்கான அலங்காரங்களையும் ஏற்பாடுகளையும் பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X