எல்லாமே கனவா.. கார்த்திக் யார் என்ற உண்மை தெரியவருமா..கார்த்திகை தீபம்!
சென்னை: மாயா, மகேசை சுட்டுத்தள்ள சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுக்க, அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த கார்த்திக், சாமுண்டீஸ்வரியை தடுத்து, இருவரையும் போலீசில் பிடித்து கொடுத்து விடுகின்றனர். இருவரும் வீட்டுக்கு வர, ரேவதி என்ன ஆச்சு என்று கேட்க, அவங்களை சுட்டுத்தள்ளிவிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால், சரியான நேரத்திற்கு டிரைவர் வந்து, அவங்களை போலீசில் பிடித்து கொடுத்துவிட்டார் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ரேவதி கண்கலங்கி, அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று அழ அவளை ராஜராஜன் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறாள்.
இந்த விஷயம் தெரிந்த பரமேஸ்வரி பாட்டி, ரேவதியின் கல்யாணம் நின்றுவிட்டது. இந்த நேரத்தில் நான் பேசுவது தவறு என, இருந்தாலும், என் பேரனுக்கு உன் மகளை கொடு என்று சொல்ல, ரேவதியும், குடும்பம் ஒன்று சேர்ந்தால் போதும் என்று திருமணத்திற்கு சம்பதிக்கிறாள். இதையடுத்து, இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், மாயா, மகேசை சுட்டு தள்ளியது பரமேஸ்வரி பாட்டி ரேவதி பொண்ணு கேட்டு வந்தது என அனைத்துமே கற்பனை கனவு என தெரிய வருகிறது. மல்லிகா வீட்டிற்கு வரும் சாமுண்டீஸ்வரி, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். மாயா, மகேஷ் பற்றிய விஷயத்தை நீ வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்ல மல்லிகா டாக்டர் அதிர்ச்சியடைந்து, அப்போ நீ அந்த மகேஷுக்கு தான் ரேவதி கல்யாணம் பண்ணி கொடுக்க போறியா என்று கேட்க இல்ல, இதுல வேற ஒரு விஷயம் இருக்கு. அதனால இந்த விஷயத்தை நீ யாருகிட்டயும் சொல்லாதே. ஆனால், நிச்சயமா ரேவதி கழுத்தில், தாலி கட்ட போகிறது அந்த மகேஷ் இல்ல, வேற ஒருவர் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.
நடக்கப்போவது என்ன: இதையடுத்து, ரேவதியின் கல்யாணத்திற்கு புடவை எடுக்க கடைக்காரரை வீட்டுக்கு வர வைத்து இருக்கிறாள். அதே நேரம், மாயா வீட்டுக்கு வர அவளை பார்த்த சாமுண்டீஸ்வரி கடுப்பாகி உன்னை எல்லாம் சுட்டுத்தள்ளி இருக்கானும், என்னமாதிரியான கேவலமான வேலையைப் பார்த்துவிட்டு, இப்போ நல்லவள் மாதிரி வந்து இருக்க, உனக்கு நான் சரியான படத்தை சீக்கிரமாக கற்றுத்தருகிறேன் பார் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கிறாள். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் உங்களுக்கு பிடித்த புடவையை எடுத்துக்கோங்க என சொல்கிறாள்.
கார்த்திக் யார் என்ற உண்மை தெரியவருமா:அப்போது, சாமுண்டீஸ்வரி டிரைவர் நீயும் வேட்டி சட்டையை எடுத்துக்கோ என்று சொல்ல, சந்திரகலா, அவனுக்கு எதுக்கு இப்போ பட்டு வேட்டி என்று கேட்க, அவனும் இந்த குடும்பத்தில் ஒருத்தன் தான், வீட்டில் ஒரு விஷயம் நடக்கும் போது, வீட்டில் வேலை செய்பவர்களுக்கு துணி வாங்கி கொடுப்பத்தில் தப்பு இல்லை என்கிறாள். இதையடுத்து, ரேவதி,டிரைவர் உங்க அம்மாவிற்கும் பத்திரிக்கை வைத்துவிட்டு, இந்த புடவையை கொடுத்துவிட்டு வரலாம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியும் நானும் வருகிறேன் என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து, அம்மா அபிராமிக்கு போன் போட்டு, ரேவதி பத்திரிக்கை வைப்பதற்கான உன்னை பார்க்க வருகிறாள். கூட, அத்தையும் வருகிறாள்கள், அவங்களுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் அவ்வளவு தான் என சொல்ல இருவரும் பயப்படுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











