தீபாவின் கச்சேரியில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கோவிலுக்கு வந்த தர்மலிங்கம் குடும்பத்தினர், முருகனிடம் தீபாவோட வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கணும், அவளுடைய ஆசை நிறைவேறனும் என்று மனம் உருகி வேண்டிக்கொண்டு, கோவில் தீர்த்தத்தை வாங்குகின்றனர். இதில், ரூபஸ்ரீ தர்மலிங்கத்துக்கு தெரியாமல் அதில் மயக்க மாத்திரையை கலந்து விடுகிறாள்.

இதையடுத்து கச்சேரி நடக்கும் இடத்திற்கு வரும் தர்மலிங்கம், கோவில் தீர்த்தத்தை தர, மயக்க மாத்திரை கலந்த தீர்த்தத்தை தீபா குடித்து விடுகிறாள். இதையடுத்து, மயக்கம் வருவதாக கார்த்திக்கிடம் சொல்கிறார். உடனே கார்த்திக், உங்களால் பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மேடையில் உட்கார வைக்கிறான். இதையடுத்து இன்யை எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 19th episode

அதிரடியாக வந்த பாம் ஸ்குவாட்: இதையடுத்து, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தீபா பாடுவதற்கு தயாராக திடீரென பாம் ஸ்குவாட் என்ற பெயரில் சிலர் மண்டபத்திற்குள் வந்து இங்கே பாம் இருப்பதாக தகவல் வந்துள்ளது அதனால் சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். இளையராஜா ஏற்கனவே நாங்கள் இரண்டு முறை எல்லாத்தையும் சோதனை செய்து தான் இங்கே கச்சேரியை ஏற்பாடு பண்ணி இருக்கோம் என்று சொல்லியும் அவர்கள் எங்களுக்கு தகவல் வந்திருக்கு எங்களது வேலை செய்ய விடுங்க எல்லாரும் வெளியே போங்க என்று வெளியே அனுப்பி வைத்துவிட்டு மண்டபம் முழுவதும் சோதனை செய்கின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial february 19th episode

கார்த்திக் போட்ட பிளான்: ஆனால் கடைசியில் பாம் எதுவும் இல்லை என்று சொல்லி வெளியே செல்கின்றனர். அடுத்ததாக உள்ளே வந்து பார்க்க அரங்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் காலியாக இருக்க கார்த்திக் நீங்க பாடுங்க தீபா எல்லாரும் கண்டிப்பா வருவாங்க என்று சொல்லி பாட உட்கார வைத்து இளையராஜாவிடம் ஸ்பீக்கரை வெளியே வைக்க சொல்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial february 19th episode

மகிழ்ச்சியில் தீபா: அதன் பிறகு தீபா பாடத் தொடங்க இந்த குரலுக்கு தானே எல்லாரும் வந்திருந்தோம் என்று வெளியே சென்ற அனைவரும் மீண்டும் உள்ளே வர தொடங்குகின்றனர். தீபா டிவியில் பாடுவதை பார்த்த அபிராமி அருணாச்சலம் ஆகியோரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X