கார்த்திக்கின் கழுத்தில் விழுந்த மாலை.. இது கடவுள் போட்ட முடிச்சு..கார்த்திகை தீபம் சீரியல்

சென்னை: பத்திரிக்கையில் ரேவதி, கணேஷ் என்று இருக்க அதைப்பார்த்து சந்திரகலா கடுப்பாகி, இது இந்த டிரைவரின் வேலையாகத்தான் இருக்கும், அவன் தான் இப்படி செய்து இருக்கிறான் என்று சொல்லுகிறாள். பின், உன் பேர் என்ன? இதுவரைக்கும் நீ , உன்னோட பேரே சொன்னதே இல்லை என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு பிரச்சனை செய்கிறாள். கார்த்திக் என்ன பெயர் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறான்.

சந்திரகலா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, பாத்தியாக அக்கா, எப்படி அமைதியா இருக்கான். அப்போ உன் பெயர் தான் கணேஷ், நீ தான் வேண்டும் என்றே பத்திரிக்கையில் பெயரை மாற்றி இருக்க என்று சொல்லிக் கொண்டே போகிறாள். அப்போது, மயில்வாகனம், அவனை அவன் ஊர்ல எல்லாரும் கிங்குனு தான் கூப்பிடுவாங்கலாம். அவன் பேர் ராஜா என்று சொல்லி சமாளிக்கிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் பத்திரிக்கையில் பெயர் மாறியதால் அனைவரும் குழப்பத்தில் இருக்க, அப்போது சாமுண்டீஸ்வரி டிரைவர் மேல தப்பு இருக்காது என்று சொல்லிவிட்டு, பத்திரிக்கையை மீண்டும் பெயரைமாற்றி அடித்துவரும் படி சொல்கிறாள். அதன்பின், ஒரே ஒரு பத்திரிகை அடித்து கொண்டுவரப்பட்டு, அனைவரும் கோயிலுக்கு கிளம்புகின்றன. அப்போது பத்திரிகையை வைத்து சாமி கும்பிடுவதற்காக, மாயம் மற்றும் மகேஷூம் வருகின்றனர். இவர்களை பார்த்து, கடுப்பான மயில்வாகனன்,

zee tamil karthigai deepam

கடுப்பான மயில்வாகனன்: செய்யுற தப்பு எல்லாமே செய்துவிட்டு, எதுவுமே செய்யாத பாடி இப்படி வந்து நிற்கிறாங்க. இவங்கள எல்லாம் எப்படி இந்த கடவுள் வாழவிடுகிறாருனு தெரியல, அந்த மகேஷ் மூஞ்சி எப்படி இருக்கு பாரு, அவனையும் இந்த மாயாவையும் அப்படியே கொன்றுவிட வேண்டும் என்று தோன்றுகிறது என்று திட்டிக்கொண்டே இருக்கிறான். அப்போது, கார்த்திக் அமைதியாக இருங்க, எதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க இவங்கள குற்றவாளிகள் நிரூபிக்க சரியான நேரம் வரும் அதுவரைக்கும் நாம அமைதியாக இருப்போம் என்கிறார். இதையடுத்து, அனைவரும் கோவிலுக்கு போக மயில்வாகனன் தனியாக ஒரு பத்திரிக்கையில் ரேவதி மற்றும் கார்த்திக் என்ற பெயரை போட்டு ஒரு பத்திரிக்கையை அடித்து வைத்திருக்கிறார். அந்த பத்திரிக்கையை பூசாரிடம் கொடுக்க, அந்த பத்திரிக்கை வைத்து, பூஜை அருமையாக நடந்து முடிந்து விடுகிறது.

கடவுள் பேட்ட முடிச்சி: அங்கு இருக்கும் சாமியார் சாமியின் கழுத்தில் இருந்து மாலையை எடுத்து, அதை சரியாக சாமியின் சிலை மீது போட்டுவிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்று சொல்ல முதலில் மகேஷ் மாலையை சாமியின் கழுத்தில் போட முயற்சி செய்கிறான். ஆனால், மாலை தவறுதலாக வேறு இடத்தில் விழுந்து விடுகிறது. இதையடுத்து, ரேவதியிடம் மாலையை கொடுத்து போட சொல்ல, அந்த நேரம் பார்த்து கார்த்திக்கிற்கு போன் வர, அவர் அந்த இடத்தில் இருந்து நகர, அந்த மாலை, நேராக கார்த்தியின் கழுத்தில் சென்று விழுந்துகிறது. இதை பார்த்ததும் மயில்வாகனன் மகிழ்ச்சி அடைகிறார். இது கடவுள் போட்ட முடிச்சு இதை யாராலும் பிரிக்க முடியாது என்று மகிழ்ச்சி அடைகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X