தீபாவுக்கு கிடைத்த பட வாய்ப்பு‌.. நெரிசலில் சிக்கிய அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபா பாடுவதற்கு தயாராக திடீரென பாம் ஸ்குவாட் என்ற பெயரில் சிலர் மண்டபத்திற்குள் வந்து அங்கே பாம் இருப்பதாக கூறி, அனைவரையும் மண்டபத்தை விட்டு வெளியே அனுப்புகின்றனர்.

கடைசியில் பாம் எதுவும் இல்லை என்று சொல்லி வெளியே செல்கின்றனர். அடுத்ததாக உள்ளே வந்து பார்க்க அரங்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் காலியாக இருக்க கார்த்திக் நீங்க பாடுங்க தீபா எல்லாரும் கண்டிப்பா வருவாங்க என்று தீபா சொல்ல அனைவரும், தீபா படுவதை கேட்டு உள்ளே வருகின்றனர். இதையடுத்து, என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 20th episode

கார்த்திகை தீபம் சீரியல்: இதையடுத்து, கார்த்திகை தீபம் இன்றைய சீரியலில், தீபாவின் பாடலைக் கேட்டு மகிழ்ந்த அனைவரும, அவளிடம் ஆட்டோகிராப் வாங்கி கைகுலுக்கி சந்தோஷப்படுகின்றனர். இந்த வழியாக சென்ற மியூசிக் டைரக்டர் ஒருவரும் தீபாவின் குரலைக் கேட்டு கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து உங்களுடைய குரல் ரொம்ப தெய்வீகமா இருக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டர் ஒரு பெரிய ப்ரொடக்ஷன்ல அடுத்து ஒரு படம் பண்ண கமிட் ஆகி இருக்கேன். அந்தப் படத்துல நீங்க தான் எல்லா பாட்டும் பாடி கொடுக்கணும் என்று சொல்ல தீபா மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கார்த்திக்கிற்கு நன்றி சொல்கிறாள். மேடையில் நன்றி சொன்னது மட்டுமின்றி கீழே இறங்கி வந்து கார்த்திக்கிடம் கைகூப்பி நிற்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial february 20th episode

திருஷ்டி எடுக்கும் அபிராமி: அடுத்ததாக கார்த்திகை தீபா இருவரும் வீட்டிற்கு வர மீனாட்சி அவர்களுக்கு திருஷ்டி எடுத்து பூசணிக்காய் சுற்றி வரவேற்கிறாள். பிறகு கார்த்திக், அபிராமி இடம் தீபா ரொம்ப நல்லா பாடினார்கள் ஒரு மியூசிக் டைரக்டர் படத்துல வாய்ப்பு கொடுத்து இருக்காங்க என்று சொல்ல அபிராமி அப்படியா சரிப்பா என்று பெரிதாக ரியாக்ட் செய்யாமல் பேசுகிறாள்.

கோவிலில் கூட்ட நெரிசல்: அதன் பிறகு அபிராமி தீபாவை கூப்பிட்டு கோவிலுக்கு அழைத்துச் செல்ல அங்கு விளக்கு போட்ட பிறகு தீபாவை பார்த்த மக்கள் நீங்க பல்லவி தானே என்று ஒன்று கூடி விடுகின்றனர். கூட்ட நெரிசலில் அபிராமியை கீழே தள்ளிவிட கையில் அடிபட்டு ரத்தம் வர தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை மறக்காமல் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X