காணாமல் போன வைர நெக்லஸ்.. காசு பணம் முக்கியம் இல்ல.. பொங்கி எழுந்த ரேவதி... கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக்கின் அம்மாவிற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக சாமுண்டீஸ்வரி மற்றும் ரேவதி என இருவரும் கோவிலுக்கு வர அபிராமி நாக்கில் அலகு குத்தி கொண்டு முகம் முழுவதும் சந்தனத்தை பூசி கொண்டு முகத்தை மறைத்தபடி இருக்க சாமுண்டீஸ்வரியால் அடையாளம் காண முடியாமல் போகிறது. உடனே கார்த்திக் எப்படிம்மா இப்படி என்று கேட்க, சாமுண்டீஸ்வரி என்னை பார்க்க வருவதாக ராஜராஜன் எனக்கு தகவல் கொடுத்தார் என்ற விஷயத்தை சொல்கிறாள் அதுமட்டுமில்லை கார்த்திக், உனக்கு நல்லபடியா கல்யாணம் ஆகணும்னு அலகு குத்திக்கொண்டதாக சொல்கிறாள். ஆனால், கார்த்திக் இன்னமும் என் மனதில் தீபா தான் இருக்கா, அவளை என்னால் மறக்க முடியவில்லை என்று சொல்கிறான்.
இதைத்தொடர்ந்து. தாலிக்கு தங்கம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தாலி செய்வதற்காக தங்கம் எடுத்து கொடுக்க ஆச்சாரி தங்கத்தை உருக்கி தாலி செய்கிறார். மயில்வாகனம் பாட்டி கொடுத்த தாலியை மாற்றி வைக்க திட்டம் போட்டு, அதை மாற்றி வைத்துவிடுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரியின் பணக்கார தோழி ஒருவர் சாமுண்டீஸ்வரியை பார்க்க வீட்டிற்கு வருகிறாள். என்னால், கல்யாணத்திற்கு வர முடியாது என்பதால் இப்பொது வந்ததாக சொல்லிவிட்டு, ரேவதிக்கு வாழ்த்து சொல்லி வைர நெக்லஸ் ஒன்றை கிஃப்டாக கொடுக்கிறாள். இதை பார்த்த மாயா மற்றும் மகேஷ் இருவரும் வாய் பிளக்கிறார்கள். அடுத்ததாக மகேஷ் மற்றும் மாயா இருவரும், அந்த வைர நெக்லஸ் பற்றி பேச கார்த்திக் இதை கவனிக்கிறான். உடனே கார்த்திக் அந்த நகையை எடுத்து மறைத்து விடுகிறான்.
அப்போது, அந்த நெக்லசை எடுக்க வரும் ரேவதி நகை இல்லாததைப்பார்த்து பதற்றப்படுகிறாள். அனைவரும் நகையை தேட, மாயா கடுப்பாகி, ரேவதி,உன்னால் ஒரு நகையை கூட பத்திரமா பார்த்துக்க முடியாதா, என்னிடம் கொடுத்து இருந்தாலும் நான் நல்லபடியாக வைத்து இருப்பேன், உனக்கு பணத்தோட அருமையே தெரியவில்லை என சத்தம் போடுகிறாள். மாயா சத்தம் போடுவதைப்பார்த்து ரேவதி ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று பதற்றப்படுகிறாள்.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த, கார்த்திக், வீட்டில் இருந்த நகை எங்கே போகும் தேடினால் கிடைத்துவிடப்போகிறது என்று சொல்லிவிட்டு தேட நகை கிடைத்துவிடுகிறது. உடனே யார் நகையை ஷோபாவிற்கு பின் மறைத்து வைத்திருப்பார்கள் என்று கேட்க, வேணும் என்றே யாராவது செய்து இருப்பார்கள். அதைவிடு நகை கிடைத்துவிட்டதுல, மாயா, உங்களுக்கு நகை தான் முக்கியமா? நீங்க ஏழை என்று தெரிந்தும், ரேவதி மகேசை கல்யாணம் செய்ய நினைச்சாங்க, ஆனால், நீங்க நகை தான் முக்கியம் என்பது போல பேசுறீங்க, இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு யோசிக்க மாட்டீங்களா என்று பதிலடி கொடுக்கிறான்.
கார்த்திக் பேசுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயா, எல்லாம் இவன் வேலை தானா, இது தெரியாமல் நாம அவசரப்பட்டு பேசிவிட்டோமே என்று பதறுகிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி நகைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மனுஷங்களுக்கு கொடுங்க.. நாளைக்கு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி இருக்கு.. வந்துடுங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள் .


Click it and Unblock the Notifications











