விழுந்து நொறுங்கிய போட்டோ..ஜோசியத்தை நினைத்து பதறும் அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், பாடி முடித்துவிட்டு கார்த்திக் தீபா இருவரும் வீட்டிற்கு வர மீனாட்சி அவர்களுக்கு திருஷ்டி எடுத்து பூசணிக்காய் சுற்றி வரவேற்கிறார். பிறகு கார்த்திக், அபிராமியிடம் தீபா ரொம்ப நல்லா பாடினாங்க, ஒரு மியூசிக் டைரக்டர் படத்துல பாட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் என்று சொல்ல, அதை கண்டுக்கொள்ளாமல் அபிராமி, அப்படியா சரிப்பா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறாள்.
இதையடுத்து, அபிராமி தீபாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல அங்கு விளக்கு போட்ட பிறகு தீபாவை பார்த்த மக்கள் நீங்க பல்லவி தானே என்று ஒன்று கூடி விடுகின்றனர். கூட்ட நெரிசலில் அபிராமி சிக்க அனைவரும் அவரை கீழே தள்ளிவிட, அபிராமியின் கையில் அடிபட்டு ரத்தம் வர தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: இதையடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் இன்று, அபிராமியும் தீபாவும் வீட்டிற்கு வர, கையில் காயத்துடன் இருக்கும் அபிராமியைப் பார்த்து அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு ரூமுக்கு வந்து கார்த்திக் போட்டோவை எடுத்து பார்த்து கொண்டிருக்கும் போது, அந்த போட்டோ கீழே விழுந்து உடைந்துவிடுகிறது. இதனால், பதற்றம் அடைந்த அபிராமி ஜோசியர் சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து பயப்படுகிறார்.

ஏன் கச்சேரிக்கு வரல: கார்த்திக் ஆபீசுக்குள் நுழைய, அங்கு எல்லாரும் கை தட்டி வாழ்த்து சொல்கின்றனர். இதனையடுத்து கார்த்திக்கும் நீங்கள் செய்ததும் பெரிய உதவி என்று பாராட்டி நன்றி தெரிவிக்கிறான். பிறகு சினேகாவை பார்த்து என்ன சினேகா கச்சேரிக்கு நீங்க வரவே இல்லை என்று கேட்க, இல்ல சார் கொஞ்சம் பர்சனல் வேலை இருந்ததாக சொல்ல கார்த்திக் மேலேயும் கீழேயும் பார்க்க சினேகா உண்மையாகவே கொஞ்சம் வேலை இருந்தது சார் என்கிறாள். அதனால் தான் வர முடியல. எனக்கும் கச்சேரிக்கு வரணும் என்ற ஆசை இருந்தது என்கிறாள்.

வீட்டிலேயே எதிரி: அடுத்து இளையராஜா கார்த்திக்கிடம் தீபா பாட கூடாதுனு எவ்வளவு தடை எவ்வளவு எதிரிகள் என்று பேச வீட்லயே ஐஸ்வர்யா அண்ணி எல்லாம் இருக்காங்க என்று சொல்கிறான். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க கோவிலில் அபிராமி கீழே விழுந்ததையும் தன்னை திட்டிய கதையையும் சொல்கிறாள். சரி ப்ரீயா விடுங்க, நான் பார்த்துக்கறேன் என்று பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து கொண்டு அபிராமியை பார்க்க வருகிறான்.

ஜோசியர் சொன்னதால் பதறும் அபிராமி: இங்கே அபிராமி அருணாச்சலத்திடம் ஜோசியர் சொன்ன விஷயங்களையும் தனக்கும் இருக்கும் பயத்தையும் சொல்ல கார்த்திக் இதை கேட்டு விடுகிறான். பிறகு கார்த்திக் ரூமுக்குள் வர இவர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர், கார்த்திக் அபிராமிக்கு மருந்து போட்டு சாப்பாடு ஊட்டி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











