கேர்ள்பிரண்ட் வாங்கி கொடுத்த சட்டை.. வீடியோ காலில் சிக்கிய ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக்கிடம் தீபா பாட கூடாதுனு எவ்வளவு தடை எவ்வளவு எதிரிகள் இருந்தன. வீட்டிலேயே பல எதிரிகள் இருந்தார்கள் என்றார்.
கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க கோவிலில் அபிராமி கீழே விழுந்ததையும் தன்னை திட்டிய கதையையும் சொல்கிறாள். இதையடுத்து, பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து கொண்டு அபிராமியை பார்க்க செல்கிறான். இதையடுத்து. அபிராமி அருணாச்சலத்திடம் ஜோசியர் சொன்ன விஷயங்களையும் தனக்கும் இருக்கும் பயத்தையும் சொல்ல கார்த்திக் இதை கேட்டு விடுகிறான். இதையடுத்து, கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: இதையடுத்து, கார்த்திகை தீபம் சீரியலில் இன்று, ஆனந்த் மற்றும் ரியா என இருவரும் சேர்ந்து கடை ஒன்றிற்கு சென்று இருக்க அபிராமி வீடியோ கால் செய்ய ஆனந்த் சமாளித்து போனை வைக்கிறான். இந்த நேரத்தில் மீனாட்சி எந்த சட்டைக்காக ரியாவுடன் சண்டை போட்டாளோ அதே சட்டையில் இருப்பதை கவனிக்கிறாள். இதனால் திரும்பவும் வீடியோ கால் செய்து இந்த சட்டை எப்படி வந்தது என்று கேட்க ஆனந்த் உனக்கு பிடிக்கும் என்பதால் நானே பெங்களூரில் தேடிப் பிடித்து வாங்கினேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறான்.

மறுக்கும் தீபா: அடுத்ததாக தீபாவை பேட்டி எடுக்க டிவி சேனல் பத்திரிக்கையாளர்கள் அபிராமி வீட்டின் முன்பு கூட மீனாட்சி கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்கிறார். தீபா இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை என்று பேட்டி கொடுக்க மறுக்க கார்த்திக் உங்களுக்கு என்ன பிரச்சனை இப்படி பேட்டி கொடுக்கிறது ஒரு விதமான ப்ரோமோஷன் தான் இதனால் உங்களுக்கு அடுத்த கட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லி அழைத்து வருகிறான்.

காரணம் என் கணவர் தான்: வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி இருக்க தீபா கீழே வந்து செய்தியாளர்களிடம் எனக்கு பேட்டி கொடுக்கலாம் பழக்கம் கிடையாது என்று சொல்கிறாள். ஐஸ்வர்யாவில் ஆரம்பித்து அபிராமி வரை எல்லோரையும் அறிமுகப்படுத்தி அதன் பிறகு என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்னுடைய ஹஸ்பண்ட் கார்த்திக் சார் தான் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











