மாயா எனக்கு அண்ணி இல்ல.. அவங்களுக்கும் எனக்கும் அந்த உறவு.. நடந்தது என்ன.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: மகேஷ், மாயா உறவை அம்பலப்படுத்த கார்த்திக் திட்டம் போடுகிறான். இதையடுத்து.மகேஷ் வீட்டிற்கு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் வந்து, கல்யாணத்துக்காக மகேஷுக்கு கோட் எடுக்கணும்னு சாமுண்டீஸ்வரி அம்மா கடைக்கு கூட்டிட்டு போக சொன்னதாக சொல்லி அழைக்க, மகேஷ், நான் மாயா இல்லாமல் வர மாட்டேன் என்று சொல்ல, அப்போது கார்த்திக், கோட் எடுக்க அவங்க எதற்கு நீங்க வாங்க போகலாம் என்று சொல்ல, மகேஷ் வேற வழியே இல்லாமல், அவர்களுடன் கிளம்பி செல்கிறான்.
பிறகு கடையில் மகேஷ் கோட் பார்த்துக் கொண்டிருக்கும்போது கார்த்திக் ராஜராஜனுக்கு போன் போட்டு சொன்ன பிளானை செய்து முடித்திடுங்க என்று சொல்கிறான். அடுத்ததாக ராஜராஜன் மாயா வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரி உங்கள கோவிலுக்கு வர சொன்னாங்க என்று சொல்ல அவள் ஆட்டோவில் கோவிலுக்கு போக, வழியில் மாயாவை திசை திருப்பி, ராஜராஜன் போனை எடுத்துக்கொண்டு கார்த்திக்கிடம் கொடுகிறான்.

கார்த்திகை தீபம்: கோர்ட்டை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் மகேஷ், மாயா வீட்டில் இல்லாததால் அவளது செல்போனுக்கு போன் செய்கிறான். பலமுறை போன் செய்தும் மாயா போனை எடுக்காததால் மீண்டும் போன் செய்ய அப்போது, போனை எடுத்த கார்த்தி, நான் தான் மாயாவை கடத்தி வைத்திருக்கிறேன். நீ ரேவதியிடம் சென்று மாயாவிற்கும் உனக்கும் இருக்கும் கள்ள தொடர்பை ஒப்புக் கொண்டால் மட்டும் தான் மாயா உனக்கு திரும்ப கிடைப்பா இல்லை என்றால் மாயாவை நான் கொன்று விடுவேன் என்றும் மிரட்ட பதறி அடித்துக்கொண்டு மகேஷ் ரேவதியை பார்க்க செல்கிறான்.
ஆட்டத்தை களைத்த மாயா: ரேவதி வீட்டுக்கு வரும் மகேஷ், நான் உன்னை காதலித்தது உண்மை இல்லை, உன் பணத்திற்காகத்தான் நடித்தேன், மாயா சொன்னதால் தான், மாயாவிற்கும் எனக்கும் என்ன உறவு தெரியுமா என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மாயா உள்ளே வந்து, ரேவதி இவன் உன்கிட்ட சும்மா விளையாடுகிறான். இவன் சொன்னதெல்லாம் நிஜம்னு நினைக்காதே என்று சொல்ல, ரேவதி இப்படியெல்லாம் கூடவா விளையாடுவீங்க மகேஷ் என்று செல்லமாக கோவப்பட்டு விட்டு உள்ளே செல்கிறாள்.
சவால் விட்ட மாயா: இதையடுத்து கார்த்திக் மற்றும் மயில்வாகனம் அந்த இடத்திற்கு வந்து, மாயா, சாமுண்டீஸ்வரி மேடமிடம் உண்மையை சொல்லிடு இல்லை என்றால், உனக்கு தான் கஷ்டம் என்று சொல்ல, என்ன உண்மையை சொல்ல சொல்ற, உன்னால இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தவே முடியாது உன்னால முடிஞ்சதை நீ பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு மாயா மகேசை அழைத்துக்கொண்டு செல்கிறாள். இதைப்பார்த்து கடுப்பான மயில்வாகனம், என்ன இவங்க இப்படியே போயிட்டு இருக்காங்க கல்யாணம் நடந்துவிடும் என்று எனக்குத்தான் பயமாக இருக்கு, இவங்களை ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்ல, அவங்க முகத்திலேயே பயம் தெரியுது அந்த பயத்தை மறைச்சிட்டு தான் போயிட்டு இருக்காங்க. அமைதியா இருங்க என்ன நடக்குதுன்னு நம்ம பார்க்கலாம் என்றார் கார்த்திக்.


Click it and Unblock the Notifications











