கார்த்திக்கு தெரிய வந்த ரெசார்ட் உண்மை..குடும்பத்தில் வந்த பிரச்சனை.கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபாவை பேட்டி எடுக்க டிவி சேனல் பத்திரிக்கையாளர்கள் அபிராமி வீட்டின் முன்பு கூட மீனாட்சி கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறார். ‌தீபா இதெல்லாம் என்ன பழக்கம் என்று பேட்டி கொடுக்க மறுக்க கார்த்திக், தீபாவை பேட்டி கொடுக்க வைக்கிறாள்.

ஐஸ்வர்யா மற்றும் அபிராமி என எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறாள். அதன் பிறகு என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்னுடைய ஹஸ்பண்ட் கார்த்திக் சார் தான் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 23th episode

திறமைக்கு மதிப்பு: இன்றைய எபிசோடில், கார்த்திக் மியூசிக் டைரக்டர் ஒருவரை சென்று சந்திக்க அவர் பொதுவா பெண்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்ப மாட்டாங்க நீங்க தீபாவ வெளிய அனுப்புவீங்களா என்று கேட்க எங்க குடும்பத்துல அப்படி இருக்க மாட்டோம் கண்டிப்பா அவங்க திறமைக்கு மதிப்பு கொடுப்போம் என்று கூறுகிறார். அதன் பிறகு கார்த்திக் அங்கிருந்து வெளியே வர அவரது குடும்பத்தின் லீகல் அட்வைசர் போன் செய்து என்ன சார் நீங்கள் அட்வைஸ்வர மாற்றிவிட்டீர்களா? எப்பொழுதும் எதுவாக இருந்தாலும் என்கிட்ட தானே கேட்பீங்க என்று கேட்க கார்த்திக் அப்படியெல்லாம் இல்லையே என்னாச்சு என்று கேட்கிறார்.

பணம் வந்தது எப்படி: அருண் ஏதோ ஒரு புதுசா ஒரு சொந்து வாங்கி இருக்காரு ரிஜிஸ்டர் ஆபீஸ் போயிருக்கும் போது தெரியவந்தது என்று சொல்ல கார்த்திக் உண்மை எதுன்னு சொல்லாமல் அந்த ரெசார்ட் தானே என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்ல கார்த்திக் ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து போனை வைக்கிறார். பிறகு நேராக ரிசார்ட்டில் அருணை சென்று சந்திக்கும் கார்த்திக் என்ன அருண் ரிசார்ட் வாங்கிட்டியா பணம் எப்படி வந்தது என்று கேட்க ஆமா வாங்கிட்டேன் ஆனா பணம் எப்படி வந்தது என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்று சொல்கிறான்.

நீ எதுவும் சொல்ல வேண்டாம்: சரி ஏன் வாங்கினதை அம்மா கிட்ட சொல்லல என்று கேட்க அவங்களுக்கு நீ தான் முக்கியம். உன்ன பத்தி மட்டும் தான் யோசிக்கிறாங்க அதனாலதான் நானே பணம் போட்டு வாங்கிட்டேன் சரியான நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன் நீ எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான். ‌

தீபாவிற்கு வாழ்த்து: தீபாவின் இன்டர்வியூ டிவியில் பார்த்த ரூபஸ்ரீ தீபா ஜெயித்து கிட்டே போற இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஆவேசப்படுகிறாள். அதேபோல் தீபாவின் இண்டர்வியூவை பார்த்த ஊர் மக்கள் நேராக தர்மலிங்கம் வீட்டுக்கு சென்று வாழ்த்து சொல்லி அவரை தர்மகர்த்தாவாக நியமிக்க முடிவு எடுத்து இருப்பதாக சொல்கின்றனர். இப்போதும் ராஜஸ்ரீ தானே தர்மகர்த்தாவாக இருப்பாங்க என்று தர்மலிங்கம் கேட்க இந்த முறை அந்த பதவியை உங்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக சொல்ல அவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் எனக்கும் பிரச்சனை இல்லை என்று தர்மலிங்கம் சொல்கிறார்.

ஊர் மக்களின் இந்த முடிவால் தர்மலிங்கம் குடும்பம் மகிழ்ச்சி அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X