ரேவதி கழுத்தில் தாலி ஏறுமா? சவால் விட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திக், மாயாவை கடத்தி, மகேஷூக்கு போன் பண்ணி, சாமுண்டீஸ்வரி மேடமிடம் உண்மையை சொல்லிடு இல்லை என்றால், மாயாவை நீ உயிரோடவே பார்க்க முடியாது என்று சொல்ல, மகேஷ் பயந்து போய், ரேவதியிடம் உண்மை சொல்லப்போகும் நேரம் பார்த்து, மாயா வந்து தடுத்து நிறுத்திவிடுகிறாள். இதையடுத்து, கார்த்திக்கிடம் வரும் மாயா, உன்னால இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தவே முடியாது உன்னால முடிஞ்சதை நீ பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு மாயா மகேசை அழைத்துக்கொண்டு செல்கிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்,
இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி மருதாணி வைத்துக்கொண்டு இருக்க, அப்போது ரேவதிக்கு திடீரென்று விக்கல் வர இரண்டு கையிலும் மருதாணி இருக்கும் கார்த்திக் தண்ணீர் எடுத்து கொடுக்கிறான். அதன் பிறகு ரேவதிக்கு போன் போனை எடுத்து காதில் வைத்து பேச வைக்கிறான். இதை பார்த்த மயில் வாகனம் இவங்களுக்குள்ள இப்படி ஒரு லவ்ஸ்ஸா என கதவை சாத்தி விட்டு செல்கிறான் இதைப்பர்த்த கார்த்திக், ஏன் இப்படி பண்றீங்க, எனக்கு ரேவதி மேல எந்த ஒரு அபிப்ராயமும் இல்லை என திட்டுகிறான்.

ஆத்திரத்தில் சந்திரகலா: இத்தனை நாட்களாக சிறையில் இருந்த சிவனாண்டி வீட்டிற்கு வர, அப்போது சந்திரலேகா அவரை பார்த்து கஷ்டப்படுகிறாள். நீங்கள் ஜெயிலுக்கு போனதற்கு காரணம் என் அக்கா தான், அக்காவை சும்மாவே விடக்கூடாது என்று சொல்ல, அதான் கல்யாணம் இருக்கல கல்யாணத்தை நம்ம தடுத்து நிறுத்துனா போதும் என்று சிவனான்டி சொல்கிறான். கல்யாணத்தை தடுத்து நிறுத்தலாம் வேணாம். மகேஷ் ரேவதி கழுத்துல தாலி கட்டணும் தாலி கட்டிய பிறகு மகேஷ் எப்படிப்பட்டவன் என்று சொன்னால் போதும், மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என நினைத்து தினம் தினம் அழுவா, அவளோட திமிரை அடக்குவதற்கு இதுதான் சரியான நேரம், அப்போதுதான் சாமுண்டீஸ்வரிக்கு சரியான பாடமாக இருக்கும் என்கிறாள் சந்திரகலா.
கல்யாணத்திற்கு வா: இதையடுத்து, சாமுண்டீஸ்வரியை பார்க்க, சிவனாண்டி வீட்டிற்கு வர, சாமுண்டீஸ்வரி நீ ஜெயிலில் தானே இருந்த என்று கேட்க ஆமாம் அங்கிருந்து தான் வருகிறேன். கல்யாணத்தில் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல சாமுண்டீஸ்வரியும் உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, இதனால், கல்யாணத்திற்கு மறக்கமா வந்துவிடு, என்று பத்திரிக்கை ஒன்றை கொடுத்து, வந்தது நல்லபடியா சாப்பிட்டு என் மகளை வாழ்த்திவிட்டு போ என பதிலடி கொடுக்கிறாள்.
ஒன்னுமே புரிய: அடுத்ததாக டாக்டர் மல்லிகா, சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு அழைத்து அந்த மகேஷ் எப்படிப்பட்டவன் என்று சொல்லிட்டேன் அப்படி இருக்கும்போது நீ உன் பொண்ணை அவனுக்கு தான் கட்டிக் கொடுக்க எல்லா வேலையும் செய்துக்கிட்டு இருக்க எனக்கு நீ என்ன பண்ண போறேனே புரியல என்று சொல்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி கொஞ்சம் பொறுமையா இரு, இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என சொல்ல இவர்கள் பேசுவதை சந்திரகலா தூரத்திலிருந்து கேட்டபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











