கார்த்திக், ரேவதி திருமணம்.. இது கடவுள் போடும் முடிச்சு.. கார்த்திகை தீபம்!
சென்னை: டாக்டர் மல்லிகா, சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு அழைத்து அந்த மகேஷ் எப்படிப்பட்டவன் என்று சொல்லிவிட்டேன். அப்படி இருக்கும்போது நீ உன் பொண்ணை அவனுக்கு தான் கட்டிக்கொடுக்க எல்லா வேலையும் செய்துக்கிட்டு இருக்க, எனக்கு நீ என்ன பண்ண போறேனே புரியல என்று சொல்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி கொஞ்சம் பொறுமையா இரு, கண்டிப்பா மகேஷ் என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட மாட்டான் என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், மல்லிகா வேற யாரையாவது யோசித்து வச்சிருக்கியா என்று கேட்க இவளும் ஆமாம் என்று சொல்ல இவர்கள் பேசுவதை சந்திரகலா ஒட்டு கேட்கிறாள், உடனே சிவனாண்டியை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல, மகேஷ் பற்றிய உண்மை தெரிந்தும், ஏன் சாமுண்டீஸ்வரி கல்யாணத்தை நடத்தனும், அது தான் எனக்கு புரியவில்லை என்று சொல்ல, இந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டால், பரமேஸ்வரி வந்து தன்னுடைய பேரனுக்கு பெண் கேட்பாங்க, இதனால் தான், சாமுண்டீஸ்வரி கல்யாணம் வரை அமைதியாக இருந்துவிட்டு பின், கடைசி நேரத்தில அந்த டிரைவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போட்டு இருக்கிறாள் என்று சொல்கிறாள்.

மாயாவின் பிளான்: சிவனாண்டி, இந்த விஷயத்தை மாயாவிடம் சொல்லிவிடு என்று சொல்ல விடு நாம பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல, சந்திரகலா, மாயாவிற்கு போன் செய்து, ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் கோவிலுக்கு வா என்று சொல்ல, மாயா கோவிலுக்கு வருகிறாள். அப்போது, சந்திரகலா, சாமுண்டீஸ்வரிக்கு உன்னை பற்றிய விஷயத்தை அந்த மல்லிகா டாக்டர் சொல்லிவிட்டாள். கடைசி நேரத்தில் உங்களை போலீசில் பிடித்து கொடுத்துவிட்டு,. அந்த டிரைவரை ரேவதிக்கு கல்யாணம் செய்து வைக்க திட்டம்போடுகிறாள் என்று சொல்ல மாயா அதிர்ச்சி அடைகிறாள். அந்த ரேவதி இப்போ என் கையில இருக்கா, அவ சாமுண்டீஸ்வரி சொல்வதை கேட்கமாட்டாள் நிச்சயம் கல்யாணம் நடக்கும் என்கிறாள்.
நேரில் வந்த முருகன்: மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி கோவிலில் உட்கார்ந்து என்ன முருகா கல்யாண தேதியே நெருங்கிடுச்சி. என்ன நடக்க போகுதோ என வருந்துகிறாள். கண் முன் தோன்றிய முருகன் பரமேஸ்வரி நான் சொன்ன மாதிரியே இந்த கல்யாணம் நடக்கும். சாமுண்டீஸ்வரியே உன் பேரன் கையால் தாலி கட்ட சொல்லுவா என்று சொல்கிறார். அது நடக்கத்தான் போகுது நீ எதை பற்றியும் கவலைப்படாதே அமைதியா இரு என்று சொல்லிவிட்டு செல்ல, பரமேஸ்வரி மாட்டி நிம்மதி அடைகிறாள்.
தடுக்கும் சாமுண்டீஸ்வரி: அடுத்து மண்டபத்தில் மணமக்கள் அழைப்பிற்கான ஏற்பாடுகள் நடக்க மகேஷ் லேட்டாக வருகிறான். அவன் வந்ததும் மயில் வாகனம் மாலையை போட்டு விடுகிறான். ரேவதியை சாமுண்டீஸ்வரி ஊர்வலத்திற்காக காரில் உட்கார சொல்ல மாயா மகேஷையும் உட்கார சொல்ல சாமுண்டீஸ்வரி இது பெண் அழைப்பு.. தான் ஊர்வலமாக அழைத்து செல்வோம். அது தான் எங்க வழக்கம் என தடுத்து நிறுத்தி மண்டபத்திற்கு வந்து விட சொல்கிறாள். மேலும் இனிமே கார்த்திக் தான் மாப்பிள்ளை தோழன் என்று சொல்ல எல்லாரும் ஷாக் ஆகின்றனர். உடனே சந்திரகலா, அவன் நம்ம வீட்டு டிரைவர் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை தம்பி போல் நினைப்பதாக பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











