தீபாவை சிக்க வைத்த ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நான் தான் பல்லவி என்ற விஷயம் தெரிந்ததும், கார்த்தியிடம் என்னை மன்னிச்சுடுங்க என்று காலில் விழ, உடனே கார்த்திக் அது மட்டும் முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான்.

அபிராமி கல்யாணம் ஒன்றிற்கு ஐஸ்வர்யாவை அழைத்து செல்ல முடிவெடுக்கிறாள். அப்போது அங்கு வரும் கார்த்திக் தீபாவை அழைத்து செல்லுங்கள், கல்யாண பெண்ணுக்கு எடுப்பதாக சொல்லியிருந்த புடவையை தீபாவே எடுக்கட்டும் என சொல்ல அபிராமியும் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 2nd full episode

இன்றைய எபிசோடு: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தீபா கார்த்திக்கிடம் என்னுடன் டைம் ஸ்பென்ட் செய்ய சொல்லி சொல்ல கார்த்தியும் அவளுடன் வெளியே செல்ல முடிவெடுக்கிறான். அபிராமியிடம் விஷயத்தை சொல்ல அவள் கல்யாண பெண்ணுக்கு புடவை எடுக்கணும் என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்புகிறாள். மேலும் சாயங்காலம் கோவிலில் விளக்கு போடணும். போனை கையிலையே வச்சிக்க எனவும் சொல்லி அனுப்புகிறாள்.

ஐஸ்வர்யா செய்த வேலை: இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் தீபாவின் போனை எடுத்து விடுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அருணை வலுக்கட்டாயமாக ஓரிடத்திற்கு அழைத்து வர அவன் இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த என்று கேட்க நீங்க வாங்கணும்னு ஆசைப்பட்ட ரெசார்ட்டை நான் வாங்கிட்டேன். அதை உங்க பேருக்கு மாற்றி கொடுக்க தான் வர சொன்னதாக சொல்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial february 2nd full episode

ரிசார்ட்டை ரெடி பண்ணுங்க: அருண் உனக்கு ஏது இவ்வளவு பணம் என கேட்க எங்களுடைய சொத்துக்களை விற்று இதை வாங்கியதாக சொல்கிறாள். வீட்ல உங்களுடைய ஆசையை புரிஞ்சிக்கல. இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். முதலில் நீங்க ரிஸார்ட்டை ரெடி பண்ணி வேலையை தொடங்குங்க. அப்புறம் வீட்டில் சொல்லிக்கலாம் என மண்டையை கழுவ அவனும் சம்மதம் சொல்லி கையெழுத்து போட்டு தனது பெயருக்கு ரிஸார்ட்டை மாற்றி கொள்கிறான்.

புடவை எடுக்கும் தீபா: இங்கே கார்த்திக் தீபா புடவை எடுக்க கடைக்கு வர தீபா எல்லா புடவையையும் எடுத்து போட்டு பார்த்து கொண்டிருக்க கார்த்திக் ஏன் இப்படி என கேட்க அத்தை முதல் முறையா என்கிட்ட பொறுப்பை கொடுத்திருக்காங்க. அதனால் நல்லபடியாக செய்து முடிக்கணும் என சொல்கிறாள். மேலும் கார்த்திக்காக பேண்ட் ஷர்ட் எடுக்க போவதாகவும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X