ரேவதியின் நெற்றியில் பொட்டு வைத்த கார்த்திக்.. நலங்கு பங்ஷனில் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: மகேஷ் மீது கடுப்பில் இருக்கும் மயில்வாகனம் தன்னை சிக்க வைத்த மகேசை ஏதாவது செய்ய வேண்டுமென யோசிக்கிறான். இந்த சமயத்தில் துர்கா காரில் இருந்து ஒரு பொருளை எடுக்கச் செல்ல ரவுடி ஒருவன் அவளிடம் பிரச்சனை செய்கிறான். மயில்வாகனம் தடுக்க போக ரவுடி அவனை அடிக்க போக மகேஷை சிக்க வைக்க திட்டமிடுகிறான். அதாவது என் குடும்பத்துல என்னை விட பெரிய ஆள் ஒருத்தர் இருக்காரு. அவர் மேல கையவை என்று சொல்லி மகேஷை போட்டு விடுகிறான்.
காலையில் சாமியாடியிடம் குறி கேட்க அனைவரும் செல்கின்றனர். அப்போது மகேஷை பார்த்த சாமியாடி உனக்கெல்லாம் குறி சொல்ல முடியாது என துரத்தி விடுகிறார். அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை பார்த்து உன் பொண்ணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும். ஆனால் நீ நினைக்குறவனுடன் நடக்காது என குறி சொல்கிறார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைய இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கருப்புசாமி சொன்ன குறியால் சாமுண்டீஸ்வரி, மகளின் திருமணத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்க அப்போது, உள்ளே வந்த சந்திரகலா, நீங்க கவலைப்படாதீங்க அக்கா, அதான் ரேவதி கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு சொல்லி இருக்காங்களே என்று ஆறுதல் படுத்துகிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி அதுசரிதான், ஆனால், மகேஷ் வீட்டோ மாப்பிள்ளையா இருப்பேன் என்று சொன்னதால் தான், இந்த திருமணத்திற்கே சம்மதித்தேன். ஆனால்,சாமியாடி நான் பார்த்த மாப்பிள்ளையோட ரேவதிக்கு திருமணம் நடக்காது என்று சொல்லி இருப்பதை நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கு என்று சொல்ல, சந்திரகலா, அக்கா பயப்படாம இரு கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என்கிறார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் தாத்தா ராஜா சேதுபதியை சந்திக்க வீட்டுக்கு வருகின்றனர். அப்போது, கோவிலில் நடந்த விஷயத்தை மயில்வாகனன் சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜா சேதுபதி, சாமியார் சொன்னது சரிதான், ஒரு கெட்டவனை என் பேத்தி கல்யாணம் பண்ணக்கூடாது கார்த்தி, நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல, இல்லா தாத்தா நான் ரேவதியை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். அதே நேரம் மகேஷ் மாதிரி ஒரு கெட்டவணுக்கு ரேவதியை கல்யாணம் செய்துவைக்கவும் மாட்டேன் என்று உறுதியாக சொல்கிறான்
இதையடுத்து மயில்வாகனன், நாளைக்கு ரேவதிக்கு நலங்கு வைக்கிறார்கள் என்ற விஷயத்த சொல்கிறான். இதைக் கேட்ட பாட்டி,முறை பையனா நீ தான் நலங்கு வைக்கணும் என சொல்கிறாள். உடனே கார்த்திக்
அது எப்படி பாட்டி நலங்கு வைக்க முடியும், அப்படி பண்ண தப்பாகிடும் என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி கொஞ்ச நகைகளை கொடுத்து, முறை பையனா நீ தான். முறைபடி நீ தான் நலங்கு வைக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். மேலும் மயில்வாகனத்திடம் நாங்க தான் நேர்ல வர முடியாது எங்களுக்கு வீடியோ கால்ல அங்கு நடக்கிறது காட்டு என சொல்கிறார்.
அடுத்த நாள் ரேவதிக்கு நலங்கு வைக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்க ரேவதி தயாராகி வெளியே வர தாய்மாமன் தான் நலங்கு வச்சு தொடங்கி வைக்கணும்.. யாராவது இருக்கிறார்களா என உறவினர்கள் கேட்க, உடனே மயில் வாகனம் அதான் நம்ப டிரைவர் இருக்காரு என்று சொல்ல எல்லோரும் குழப்பம் அடைகின்றனர். டிரைவர் சாமுண்டீஸ்வரி அத்தைக்கு தம்பி மாதிரி அப்போ ரேவதிக்கு மாமா முறை தானே என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











