ஐஸ்வர்யா செய்த சதி.. அவமானப்பட போகும் அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமி சொன்னபடி தீபாவும், கார்த்திக்கும் சேர்ந்து திருமண புடவை எடுத்துவைட்டு இருவரும் ஜாலியாக வெளியில் சென்று விடுகின்றனர். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, தீபாவை மாட்டிவிட தீபாவின் போனை திருட்டுத்தனமாக எடுத்து வைத்துக்கொள்கிறாள் இதையடுத்து, அடுத்து என்ன நடப்போகிறது என்று பார்க்கலாம்.

அதாவது, தீபாவும் கார்த்திக்கும் ரெஸ்ட்டாரெண்ட் சென்றிருக்க அப்போது தீபா, கார்த்திக்கிற்கு தெரியாமல் கூல் ரிங்க்ஸை மாற்றி வைத்து விட கார்த்திக் கூல் ட்ரிங்க்ஸ் ரொம்ப டேஸ்ட்டாக இருக்கு என்று தீபாவிடம் கேட்கிறான். அப்போது, தீபா ஆமாம் எனக்கும் அப்படி தான் இருக்கு என சொல்ல கார்த்திக் நடிக்காதீங்க நீங்க கூல்ட்ரிங்கை மாற்றியதை நான் பார்த்துட்டேன் என சொல்கிறான். இதனை தொடர்ந்து DJ, யாராவது டேன்ஸ் ஆட ரெடியா இருக்கீங்களா என்று கேட்க தீபா கையை தூக்கி கார்த்திக்கிற்காக நடனமாடி இப்போவாவது மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க என கெஞ்ச கார்த்திக் முடியாது என சொல்லி விடுகிறான்.

zee tamil television Karthigai Deepam serial february 5th full episode

வேறொரு பெண்ணோடு ஆனந்த்: இதையடுத்து, வெளியே வரும் போது ஆனந்த் வேறொரு பெண்ணோடு உட்கார்ந்து ஒரே ஜூஸில் ரெண்டு ஸ்ட்ரா போட்டு குடித்து கொண்டிருப்பதை பார்த்து தீபா அதிர்ச்சி அடைந்து, கார்த்திக்கை கூப்பிட்டு காட்ட அவனும் அதிர்ச்சி அடைகிறான். உடனே ஆனந்துக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என்று கேட்க, அவன் பெங்களூரில் இருப்பதாக பொய் சொல்ல இவருவரும் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial february 5th full episode

தீபாவை திட்டும் அபிராமி: மறுபக்கம் கோவிலுக்கு வந்த அபிராமி, தீபாவுக்கு போன் போட தீபா போனை எடுக்காமல் இருக்கிறாள். கார்த்திக்கிற்கு போன் போட நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் கடுப்பாகி வீட்டிற்கு வந்து விடுகிறாள். இங்கே இவர்கள் சிக்னலில் ஆனந்தை மிஸ் செய்து விடுகின்றனர். தீபா கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் ஐஸ்வர்யா திட்டுத்தனமாக போனை அவளது பேக்கில் போட்டு விட அபிராமி தீபாவை திட்டி விடுகிறாள்,

zee tamil television Karthigai Deepam serial february 5th full episode

புடவை மாற்றி வைக்கும் ஐஸ்வர்யா: தீபா நடந்தே வேகவேகமாக கோவிலுக்கு ஓடி வந்து கோவில் மூட போகும் தருணத்தில் விளக்கு போட்டு அபிராமி வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். மறுநாள் தீபா குளிக்க போன சமயத்தில் ஐஸ்வர்யா ரூமுக்குள் நுழைந்த கல்யாண பெண்ணுக்கு எடுத்த புடவையை எடுத்து விட்டு அதற்கு பதிலாக வெள்ள புடவையையும் விபூதியையும் வைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X