வெள்ளை புடவை, விபூதியுடன் திருமணத்திற்கு கிளம்பிய தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவும் கார்த்திக்கும் ரெஸ்ட்டாரெண்டில் கார்த்திக்கிற்காக டான்ஸ் ஆடி, இப்போதாவது மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க என கெஞ்ச கார்த்திக் முடியாது என்று சொல்லி விடுகிறான்.

இதையடுத்து, இருவரும்,வெளியில் வரும் போது ஆனந்த் வேறொரு பெண்ணோடு உட்கார்ந்து ஒரே ஜூஸில் ரெண்டு ஸ்ட்ரா போட்டு குடித்து கொண்டிருப்பதை பார்த்து தீபா அதிர்ச்சி அடைந்து, கார்த்திக்கிடம் காட்டுகிறான். உடனே ஆனந்துக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என்று கேட்க, அவன் பெங்களூரில் இருப்பதாக பொய் சொல்ல இவருவரும் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 5th full episode review

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: இதையடுத்து, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ஆனந்த் வேறு ஒரு பெண்ணுடன் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பெண் தன்னுடைய கழுத்தில் தாலி கட்டும்படி கேட்கிறாள். ஆனந்தும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வரும் நேரத்தில் மீனாட்சியிடம் இருந்து போன் வர அவன் அந்த பெண்ணிடம் மழுப்பி விடுகிறான்.

zee tamil television Karthigai Deepam serial february 5th full episode review

வெள்ளை புடவை: கார்த்திக் மற்றும் தீபா இவர்களை பின் தொடர்ந்து சென்ற நிலையில் சிக்னலில் ஆனந்தை மிஸ் செய்து விடுகின்றனர். இதையடுத்து, ஐஸ்வர்யா மற்றும் தீபா இருவரும் குளிக்க போயிருக்கும் நேரமாக அவள் வாங்கி வந்த புடவை எடுத்து அதற்கு பதிலாக வெள்ளை நிற புடவையையும் விபூதியையும் வைத்து விடுகிறாள் ஐஸ்வர்யா. அடுத்து அபிராமி மற்றும் தீபா என இருவரும் நலங்கு பங்ஷனுக்கு கிளம்பி செல்கின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial february 5th full episode review

ஷாக்கான சினேகா: ஆபீஸ் வந்த கார்த்திக் சினேகாவை அழைத்து, தீபாவின் போட்டோவை காட்டி பல்லவிக்கு பெருசா பாராட்டு விழா நடத்த வேண்டும். அதற்கு ஏற்பாடு பண்ணு, பெரிய பேனரை ரெடி பண்ணு என ஆர்டர் போடுகிறான். உடனே சினேகா இளையராஜாவுக்கு போன் போட்டு விசாரிக்க கார்த்திக்கின் மனைவி தான் தீபா என்றும் அவள் தான் பல்லவி என்ற உண்மையும் தெரிய வர சினேகா அதிர்ச்சி ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X