பெண்ணை கெடுத்த பழி.. குற்றவாளியான கார்த்திக், பஞ்சாயத்தார் கொடுத்த தீர்ப்பு என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திக் நலங்கு வைத்ததால் கடுப்பான மாயா மற்றும் சந்திரகலா, இந்த கார்த்திக்கை எப்படியாவது வெளியில் துரத்த வேண்டும் என்று பிளான் போடுகின்றனர். அப்போது, மாயா ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து, கார்த்திக் ரூமுக்கு சென்று அவன் கெடுத்து விட்டதாக கூறி வெளியே ஓடி வர வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு அந்த பெண் கார்த்திக் ரூமுக்குள் செல்ல இதை ராஜ ராஜன் பார்த்து விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி சத்தம் போட்டபடி வெளியில் வருகிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

இன்றைய எபிசோடில், கார்த்திக் கெடுத்துவிட்டதாக அந்த பெண் சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். அப்போது, கார்த்திக், நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த பெண் தான் என் ரூமுக்கு வந்து, டிரஸ்சை கிழித்துக்கொண்டு கத்திக்கொண்டே வெளியில் ஓடிவந்தார்கள் என்று சொல்கிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி, நீ யார் எதுக்கு நீ கார்த்திக் ரூமுக்கு போன என்று கேட்க, அப்போது அந்த பெண், நான் சந்திரகலாவின் உறவினர். வாஷ் ரூம் தேடிவந்தேன். அவரின் அறைக்கு போனேன். ஆனால், இவர் கதவை மூடிவிட்டு என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்கிறார்.

இன்றைய எபிசோட்: ஒரு பக்கம் பிரச்சனை இப்படி சென்று கொண்டிருக்க, மயில்வாகனம் தாத்தாவிற்கு போன் போட்டு, கார்த்திக் ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாக, ஒரு பெண் அவர் மீது பொய் புகார் கூறுக்கிறார் என்று சொல்ல, இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த தாத்தா, யார் அந்த பெண் என கேட்க, அப்போது மயில் வாகனம் தாத்தா, கார்த்திக் நிச்சயம் தப்பு செய்து இருக்க மாட்டான். இப்போது அனைவரும் பஞ்சாயத்துக்கு செல்கிறோம் என்று சொல்ல தாத்தா கோபம் அடைந்து போனை வைக்கிறார்.

zee tamil karthigai deepam

சாட்சி சொன்ன மாமா: பஞ்சாயத்தில் அனைவரும், கூடி இருக்க அந்த பெண் கார்த்திக் மீது புகார் சொல்லியதால், சாமுண்டீஸ்வரி வழக்கமாக எப்போதும் நான் தான் தீர்ப்பு சொல்லுவேன், இது என் குடும்பத்தில் நடந்த பிரச்சனை என்பதால்,நான் தீர்ப்பு சொல்வது சரியாக இருக்காது என்று சொல்கிறாள். இதையடுத்து, தீர்ப்பு சொல்ல பெரியவர் ஒருவர் இருப்பதாக சொல்லி தீர்ப்பு சொல்ல வந்தவரை வரவேற்று உட்கார வைக்கிறாள். அந்த பெரியவர் என்ன குற்றசாட்டு என்று விசாரிக்கிறார். அந்த பெண் கார்த்திக், தன்னை கெடுத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார். அப்போது, இந்த பெரியவர் சாட்சி ஏதாவது இருக்கா என்று கேட்க, அப்போது குறுக்கிடும் ராஜராஜன் இந்த பொண்ணு கார்த்தியின் ரூமுக்குள் சென்றதையும் பிறகு சத்தம் போட்டு கொண்டு வெளியே வந்ததையும் தான் பார்த்ததாக சொல்கிறார்.

zee tamil karthigai deepam

பஞ்சாயத்து தீர்ப்பு: இதனால் கார்த்திக் குற்றவாளி என்று அனைவரும் முடிவுக்கு வருகின்றனர், அதன் பிறகு நடுவர் இதுக்கு நீ தீர்ப்பு சொன்னா என்ன சொல்லுவ என்று சாமுண்டேஸ்வரியை கேட்க இந்த ஊரை விட்டே துரத்தி இருப்பேன் என்று சொல்கிறாள். அப்போ. அப்படியே பண்ணிடுவோம்.. இனிமே இவன் இந்த ஊருக்குள் இருக்கவே கூடாது, திரும்ப வரவும் கூடாது என தீர்ப்பு சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X