திருமணத்தில் அவமானப்பட்ட அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஆபீசுக்கு வரும் கார்த்திக் சினேகாவை அழைத்து, தீபாவின் போட்டோவை காட்டி பல்லவிக்கு பெருசா பாராட்டு விழா நடத்த வேண்டும். அதற்கு ஏற்பாடுகளை செய் என்று ஆர்டர் போடுகிறார்.உடனே சினேகா இளையராஜாவுக்கு போன் போட்டு விசாரிக்க கார்த்திக்கின் மனைவி தான் தீபா என்றும் அவள் தான் பல்லவி என்ற உண்மையும் தெரிய வர சினேகா அதிர்ச்சி ஆகிறாள்.

அதே போல, தீபா குளிக்க போயிருக்கும் நேரம் பார்த்து யாருக்கும் தெரியாமல் அவள் வாங்கி வந்த புடவையை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வெள்ளை நிற புடவையையும் விபூதியையும் வைத்து விடுகிறாள் ஐஸ்வர்யா. இந்த விஷயம் தெரியாமல், அபிராமி மற்றும் தீபா இருவரும் நலங்கு பங்ஷனுக்கு கிளம்பி செல்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 6th full episode

அவமானப்பட்ட அபிராமி: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், இருவரும் கல்யாண வீட்டிற்கு வர அங்கிருந்தவர்கள் பகையை எதுவும் மனதில் வச்சிக்காமல் வந்திருக்கீங்க என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்ல இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்கிறாள் அபிராமி. அந்த புடவையை வாங்கி பிரித்த கல்யாண பெண், அதில் வெள்ளை புடவையும் விபூதியும் இருப்பதை பார்த்து பயத்தில் கீழே போட்டு விட்டு கத்துகிறாள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial february 6th full episode

இனி என் முகத்துல முழிக்காத: நீ பழைய பகையை மனசில் வச்சி தான் இப்படி கீழ்த்தரமான வேலை பண்ணிருக்க என்று அபிராமியை திட்டி வெளியே துரத்திவிட தீபா, அபிராமி இருவரும் கண் கலங்கி நிற்கின்றனர். அப்போது, அபிராமி நீ கோவிலில் விளக்கு போடலைனு திட்டினதுனால தான் இப்படி பண்ணி இருக்கே என்று தீபாவை திட்டுகிறாள், இனிமே நீ என் முகத்துல கூட முழிக்காத, உன் கையால தண்ணீ கூட கொடுக்கக்கூடாது என்று ஆவேசப்படுகிறாள். இங்க நடந்த விஷயம் எதுவும் கார்த்திக்கிற்கு தெரியக் கூடாது என கண்டிஷன் போடுகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial february 6th full episode

ஏதோ தப்பு நடந்து இருக்கு: அனால், இங்கிருந்து இதை பார்த்த கார்த்தியின் பெரியம்மா ஒருவர் கார்த்திக்கிற்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி எனக்கு என்னமோ தீபா மேல தப்பு இருக்குற மாதிரி தெரியல, அபிராமியும் இப்படி செய்ய கூடிய ஆள் கிடையாது, ஏதோ தப்பா நடந்திருக்கு என்று சொல்ல நான் பார்த்துக்கறேன் என்று கார்த்திக் போனை வைக்கிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X