ஒரு பக்கம் கார்த்திக், மறுபக்கம் மீனாட்சி..நடக்க போவது என்ன?கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா, அபிராமி இருவரும் திருமணத்திற்கு செல்கின்றனர். அப்போது, கல்யாண பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்கிறாள் அபிராமி. அந்த புடவையை வாங்கி பிரித்த கல்யாண பெண், அதில் இருக்கும் வெள்ளை புடவையையும் விபூதியையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

அப்போது, அபிராமி நீ கோவிலில் விளக்கு போடலைனு திட்டினதுனால தான் இப்படி பண்ணி இருக்கே என்று தீபாவை திட்டுகிறாள், இனிமே நீ என் முகத்துலக்கூட முழிக்காத, உன் கையால தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது என்று ஆவேசப்படுகிறாள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த கார்த்திக்கின் பெரியம்மா, கார்த்திக்கிற்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி எனக்கு என்னமோ தீபா மேல தப்பு இருக்குற மாதிரி தெரியல, அபிராமியும் இப்படி செய்ய கூடிய ஆள் கிடையாது, ஏதோ தப்பா நடந்திருக்கு என்று சொல்ல நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கார்த்திக் போனை வைக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

zee tamil television Karthigai Deepam serial february 7th full episode

வசமாக சிக்கிய ஆனந்த்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் ஆபிசில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் ஆனந்த் காரை பார்க்க அதில் அவன் அந்த பெண்ணுடன் சென்று கொண்டிருக்கிறான், அந்த பெண் டிரஸ் எடுக்க வேண்டும் என்று அவனை ஒரு கடைக்கு அழைத்து செல்கிறாள். அதே கடைக்கு மீனாட்சியும் தனது கல்யாண நாளிற்காக துணி எடுக்க வந்திருக்கிறாள்.

கடையில் வாக்குவாதம்: அந்த பெண் ட்ரெஸ் எடுக்க ஆனந்தையும் கூப்பிட முதலில் தயங்கும் அவன் பிறகு கடைக்குள் வருகிறான், அங்கே மீனாட்சி அவனுக்காக ஒரு ஷர்ட் எடுத்து அதை போட்டோ எடுத்து, ஆனந்திற்கு அனுப்பி ஓகேவா என்று கேட்கிறாள். ஆனந்த் அதை பார்த்து ஓகே என்று சொல்ல இதே ட்ரெஸ்ஸை ஆனந்த்துடன் வந்த பெண்ணும் எடுத்து விட அவளுக்கும் மீனாட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

நடக்கப்போவது என்ன: ஆனந்த் மீனாட்சி இங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான், இதனால் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்ய பின் தொடர்ந்து வந்த கார்த்திக் கடைக்குள் நுழைய ஆனந்த் மேலும் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ஆனந்த் கார்த்திக், மீனாட்சியிடம் சிக்கி கொள்வானா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X