பழி போட்ட பெண்.. தாலி கட்ட ரெடியான கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கார்த்திக் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை என தெரியவந்ததால், பஞ்சாயத்தில் கார்த்திகை ஊரை விட்டு வெளியே போக வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்படுகிறது. இதையடுத்து, கார்த்திக் வீட்டுக்கு வர அப்போது, ராஜராஜன் இந்த மாதிரியான ஆள் இனி என்வீட்டில் இருக்கக்கூடாது என்று சொல்கிறான். அப்போது, மயில்வாகனன் ராஜராஜனை தனியாக அழைத்து, அந்த ட்ரைவர் தம்பி யார் தெரியுமா? உங்க தங்கச்சி அபிராமியோட பையன்.
ராஜா சேதுபதி ஊர்ல கோவில் கும்பாபிஷேகத்தை உங்க கையால் நடத்தி வைக்கணும்.. இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கணும் என்பதற்காக தான் இங்க வந்திருக்காரு என்ற விஷயத்தை உடைக்கிறான். இந்த விஷயம் தெரிந்த, ராஜராஜன் என் தங்கச்சி பையனா? இந்த சொத்துக்கெல்லாம் சொந்த காரனா? என் மருமகன் அவன்.. அவனை இப்பவே பார்க்கணும் என வருத்தப்படுகிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக்கை சந்தித்த ராஜராஜன், நான் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்துவிடு,என் குடும்பத்துடன் என்னை சேர்த்து வைப்பதற்காக இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாயா என்று கண்கலங்குகிறார். அடுத்து, நான் அம்மாவை பார்க்க வேண்டுமென்று சொல்ல கார்த்திக் அவரது அம்மாவை வரவைத்து பார்க்கிறார். இருவரும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கண்கலங்கி பேசிக்கொள்கின்றனர்.
தாலி கட்ட ரெடியான கார்த்திக்: இதையடுத்து, அனைவரும் சேர்ந்து ஒரு பிளான் போடுகிறார்கள். அதாவது கார்த்திக் மீண்டும் பஞ்சாயத்தை கூட்டுங்க, நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறான். அப்போதுதான் எல்லா உண்மையும் தெரியவரும் என்று சொல்ல, ராஜராஜன் மீண்டும் பஞ்சாயத்தை கூட்டுகிறார். அப்போது, அனைவரும் அமர்ந்திருக்க இந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தது நான் தான் இந்த பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போக நான் காரணமாக இருந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன் இதனால் இந்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்.என்று கையில் தாலிகை எடுக்க, அந்த பெண் பதறிப்போய், அய்யோ கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். அப்போது அங்கு இருப்பவர்கள் இந்த பையன் நல்ல பையனாக தான் இருக்கிறான். நீதானே வாழ்க்கையை கெடுத்து விட்டான் என்று சொன்ன, இவனையே கல்யாணம் செய்துகொள் என அனைவரும் அந்த பெண்ணை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.
தெரியவந்த உண்மை: அப்போது கூட்டத்தில் இருந்த அந்தப் பெண்ணின் காதலன் எங்களை மன்னித்து விடுங்கள், நான் தான் இந்த பெண்ணின் காதலன், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறோம். எங்கள் திருமணத்திற்கு பணம் வேண்டும் என்பதற்காக நாங்கள் சிவதாண்டியிடம் சென்றோம். சிவன் தாண்டி தான் கார்த்திக் மீது பழி போட்டால் இருபதாயிரம் ரூபாய் தருவதாக சொன்னார் அதற்காகத்தான் இந்த நாடகமாடினோம் என்று உண்மையயை சொல்கிறார். இதையடுத்து இன்று நடப்பைத பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











