கார்த்திக் எடுத்த முடிவு.. சகுனி வேலை பார்க்கும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், திருமணத்தில் நடந்த குழப்பம் பற்றி கார்த்திக் தீபாவிடம் கேட்கிறார். அப்போது அவள் எதையோ சொல்லி சமாளிக்க, எல்லாமே எனக்கு தெரியும் என கார்த்திக் சொன்னதும் தீபா கலங்கி அழுகிறாள்.

இது எப்படி நடந்தது? யார் பண்ணாங்கனு எனக்கு தெரியும் என சொல்லி வெளியே வந்து ஐஸ்வர்யாவை பார்த்து எதுக்கு கடைக்கு வந்தீங்க, எதுக்கு எங்க ரூமுக்கு வந்தீங்க. புடவையை நீங்க தான் மாத்தி வச்சிருப்பீங்கனு எனக்கு தெரியும் என சொல்ல ஐஸ்வர்யா நான் ஒன்னும் பண்ணல என்று சொல்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial february 9th episode

கார்த்திக் ஐஸ்வர்யாவை கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போது,அங்கு வரும் அருண் ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்துவிட்டு, தீபா உண்மையை மறைத்த விஷயத்தை பெரிய குற்றமாக பேசுகிறான். இதனால், கார்த்திக் அருணுக்கு இடையே வாக்குவாதம் உருவாகிறது. அங்கு வரும் அபிராமி இதுக்கு தான் கார்த்திக்கிடம் இந்தத விஷயத்தை சொல்லாதேன்னு சொன்னேன் என்று தீபாவிடம் கோவப்படுகிறாள். உடனே இந்த விஷயத்தை தீபா சொல்லல பெரியம்மா தான் சொன்னாங்க என்று கூறுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 9th episode

விழா போஸ்டர்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், வீட்டில் நடந்த விஷயத்தை ஐஸ்வர்யா மாயாவுக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே இந்த பிரச்சனையில் அருண் எனக்கு சப்போர்ட்டா பேசுனாரு, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு நன்றி கூறி போனை வைக்கிறாள். இதனையடுத்து கார்த்திக் தீபாவுக்காக விழா நடத்த உள்ள நிலையில் அதற்கான போஸ்டரை வீட்டிற்கு எடுத்து வந்து தீபாவிடம் காட்டுகிறான். இதை பார்த்த தீபா பல்லவி என்ற பெயருக்கு பதிலா தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும், இதுக்கு காரணமாக இருந்தது நீங்க தான் என்று சொல்ல கார்த்திக்கும் தீபாவின் ஆசைப்படியே பெயரை போடுவதாக சொல்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial february 9th episode

கண்கலங்கும் தர்மலிங்கம்: மறுநாள் அபிராமி, தர்மலிங்கம் வீட்டு வாசல் உட்பட அனைத்து இடங்களிலும் தீபாவின் விழா போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்து கடுப்பாகும் ஐஸ்வர்யா இதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று பிளான் போடுகிறாள், கார்த்திக் தர்மலிங்கத்திற்கு போன் செய்து வெளியே வந்து பார்க்க சொல்ல அவர்களும் போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகின்றனர். இதுக்காக தான் இவ்வளவு நாளா காத்திட்டு இருந்தேன், அது இன்னைக்கு உங்களால் நடந்திருக்கு மாப்பிள்ளை என்று ஆனந்த கண்ணீர் விடுகிறார். தீபாவும் இங்கே போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X