மன்னிக்கவே முடியாது.. தீபாவிடம் வீராப்பை காட்டும் கார்த்தி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா தான் நான் இத்தனை நாளா தேடிக்கொண்டிருந்த பல்லவி என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட அபிராமி இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சிருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்சகாரியா இருப்ப என கோபப்படுகிறாள்.

அப்போது குறுக்கிடும் கார்த்திக், தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா. இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு பால்ல சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன் என்று சொல்கிறான். அதுமட்டுமின்றி நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன் என்று சொல்ல அபிராமி நம்ப கம்பெனியில் பாடுனா போதாதா என்று கேட்க மற்றும் கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை என்று சொல்கிறான் இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february1st full episode

கார்த்திகை தீபம் சீரியல்: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட கார்த்திக் பின்னாடியே வருகிறான். உடனே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான் என்று கண் கலங்கி அழுகிறாள்.

என்னைக்கும் மன்னிக்க மாட்டேன்: மேலும் என்னை மன்னிச்சுடுங்க என்று காலில் விழ, உடனே கார்த்திக் அது மட்டும் முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான். இதையடுத்து, கவலையோடு இருக்கும் தீபாவை பார்க்கும் மீனாட்சி என்ன ஆட்சி என்று கேட்க, தீபா அமைதியாக இருக்கிறாள். தீபா அமைதியா இருந்தா என்ன அர்த்தம் கார்த்திக் என்ன சொன்னான் என்று கேட்க, தீபா நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறாள்.

திருமணத்திற்கு செல்லும் தீபா: அடுத்ததாக அபிராமி கல்யாணம் ஒன்றிற்கு ஐஸ்வர்யாவை அழைத்து செல்ல முடிவெடுக்கிறாள். அப்போது அங்கு வரும் கார்த்திக் தீபாவை அழைத்து செல்லுங்கள், கல்யாண பெண்ணுக்கு எடுப்பதாக சொல்லியிருந்த புடவையை தீபாவே எடுக்கட்டும் என சொல்ல அபிராமியும் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X