டாக்டரை விபத்தில் சிக்க வைத்த மாயா.. கார்த்திக்கிடம் மாயா சிக்குவாளா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: பந்தக்கால் விழாவிற்கு மல்லிகா டாக்டர் வருவதை தெரிந்து கொண்ட மாயா. அவர்கள் வந்தால்,எல்லாம் விஷயமும் தெரிந்துவிடும் என்பதால் மாயா மருத்துவமனைக்கு வந்து திட்டம் போட்டு, மல்லிகா டாக்டரின் காரில் மயக்க மருந்தை ஏசியில் வைத்து விட்டு, வீட்டிற்கு வந்து விட இங்கே டாக்டருக்கு காத்திருந்த சாமுண்டீஸ்வரி பந்தக்கால் நட்டுவிடலாம் என முடிவு செய்கிறாள்.
பந்தக்கால் நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிய மறுபக்கம் மாயாவின் திட்டத்தின்படி டாக்டர் வந்த கார் விபத்தில் சிக்குகிறது. சாமுண்டீஸ்வரி டாக்டருக்கு போன் செய்ய போன் எடுக்காத நிலையில் அடுத்து நர்ஸ் போனை எடுத்து அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்ற விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: மல்லிகா டாக்டருக்கு விபத்து நடந்ததை கேள்விப்பட்ட சாமுண்டீஸ்வரி, டிரைவர் கார்த்திகை அழைத்து இதுபோல டாக்டருக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டது. இங்கு வரும் போதுதான் விபத்து நடந்து இருக்கு என்று சொல்ல டாக்டரை பார்க்க வருகின்றனர். அப்போது, ஹாஸ்பிடலில் டாக்டருக்கு கண்ணில் அடிபட்டு கட்டு போடப்பட்டு இருக்கிறது. மேலும் டாக்டர் 1 மாசத்திற்கு பார்க்க முடியாது எனவும் தெரிய வர சாமுண்டீஸ்வரி வருத்தமாகிறாள்.
அடுத்ததாக கார்த்திக் டாக்டரிடம் தனியாக பேசும் போது எப்படி விபத்து நடந்துச்சு என்று விசாரிக்க காரில் ஏறி ஏசி போட்டதும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மயக்கம் வந்து விட்டதாக சொல்ல கார்த்திக்கிற்கு சந்தேகம் வருகிறது. இதையடுத்து எந்த இடத்தில் விபத்து நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டு, கார்த்திக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று, காரில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று பார்க்க கிளம்புகிறான்.
கார்த்திக்கிடம் சிக்கிய மாயா: கார்த்திக் டாக்டரிடம் பேசுவதை, மாயா ஒட்டுக்கேட்டு விடுகிறாள். நிச்சயம் கார்த்திக் காருக்கு தான் போவான், அப்போது குளோரோபார்ம் இருந்தா பிரச்சனையாகிவிடும். இதனால்,அவன் போவதற்கு முன்பே நாம அந்த இடத்திற்கு போகவேண்டும் என்று, கார்த்திக் வருவதற்கு முன்பே, விபத்து நடந்த இடத்திற்கு வந்து, ஏசிக்குள் இருக்கும் குளோரோபார்ம் பாக்கெட்டை வெளியே எடுத்துக்கொண்டு கிளம்பும் நேரத்தில் கார்த்திக் கார் வருகிறது.
அய்யோ நல்லவசமாக மாட்டிக்கிட்டோம் இப்போ மட்டும் கார்த்திக் நம்பல பார்த்தா அவ்வளவு தான், என்று பயந்து போன மாயா ஓடி ஒளிகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











