பல்லவியை வெறுக்கும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று கார்த்தியின் ஆபீசுக்குள் வரும் சிதம்பரம்,பல்லவி பாடிய பாடலை போட்டு காட்டி, தெரியாம இந்த பீல்டுக்குள்ள வந்துட்டீங்களே தம்பி என்று சொல்லி அங்கிருந்து எழுந்து செல்கிறான். இதனால், ஆத்திரம் அடையும் கார்த்தி, யாரிடமும் பேசாமல் ஆபிசில் இருந்து வெளியே வந்து விடுகின்றனர்.

என்னால் தான் கார்த்திக்கு இந்த அவமானம் என்று தவிக்கும் தீபா,முருகன் கோவில் சென்று இனிமேலும் என்னால் பொய் சொல்லி வாழ முடியாது என்று தற்கொலை முயற்சி செய்ய முடிவெடுக்கிறாள். அப்போது அவளை பின் தொடர்ந்து வரும் மீனாட்சி இதற்கான காரணங்களை நிரூபித்து கார்த்தி உடன் நீ வாழ வேண்டும் என தீபாவின் மனதை மாற்றி அங்கிருந்து அழைத்து செல்கிறாள்.

 zee tamil television Karthigai Deepam serial january 10th full episode

இதையடுத்து, தீபா வீட்டுக்கு வரும் போது, கார்த்திக் அபிராமி இடம் பல்லவி சிதம்பரத்திற்காக பாடிய விஷயத்தை சொல்லி, அவள் பெரிய நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாள் என்று ஆதங்கப்படுகிறான். இதையடுத்து தற்போது நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கார்த்திக் மற்றும் இளையராஜா இருவரும் காரில் அபீசுக்கு சென்று கொண்டிருக்கும் போது பல்லவி போனில் இருந்து போன் கால் வர கார்த்திக் போனை எடுக்காமல் அவாய்ட் செய்கிறான், ஆனாலும், தீபாவாக இருக்கும் பல்லவி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்ததார், கார்த்திக் போனை எடுக்கிறான். உடனே பல்லவி, சார், நான் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல கார்த்திக் இன்னும் பேச என்ன இருக்கு, அதான் போய் பாடி கொடுத்துட்டல அப்புறம் என்ன என்று கேட்க பல்லவி மன்னிப்பு கேட்க கார்த்திக் நான் எதிரியை கூட மன்னிப்பேன், ஆனால் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவும் மாட்டேன். என் பக்கத்தில் வச்சிக்கவும் மாட்டேன் என்று சொல்லி போனை வைக்க தீபா வருத்தப்படுகிறாள்.

குழந்தையை காப்பாற்றிய தீபா: அடுத்து தீபா வெளியில் செல்லும் போது அவள் எதிரே நடந்து வந்த ஒரு குழந்தை மற்றும் அம்மா மீது கார் மோத வர தீபா இருவரையும் காப்பாற்றுகிறாள். இருந்த போதிலும் லேசான காயம் ஏற்பட தீபா அவர்களை ஹாஸ்பிடல்க்கு அழைத்து செல்கிறாள். அந்த பெண்மணி தனது கணவருக்கு போன் செய்து குழந்தைக்கு அடிபட்ட விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் வர சொல்கிறாள்.

குழம்பிய சவுண்ட் எஞ்சினியர்: ஹாஸ்பிடல் வந்த அவர் தீபாவை பார்க்க இது பல்லவி தானே என்று குழப்பம் அடைகிறார், காரணம் சிதம்பரம் ஆபிஸில் வேலை செய்யும் சவுண்ட் எஞ்சினியர் இவர் தான். தீபா பாடிய பாடலை ரெகார்ட் செய்ததும் இவர் தான் என்பது தெரிய வருகிறது. ஆனால் தீபாவுக்கு இவரை பற்றி எதுவும் தெரியவில்லை. தீபா கிளம்பி வந்ததும் அவரது மனைவி என்னங்க அந்த பொண்ணையே பார்த்திட்டு இருக்கீங்க என்று கேட்க சிதம்பரம் இந்த பொண்ணை வற்புறுத்தி பாட வச்சார், அந்த பொண்ணு பேர் பல்லவி எனவும் சொல்கிறார்.

இனி நடக்கப்போது என்ன: இதனை தொடர்ந்து மறுநாள் ஆபிஸ் வரும் சிதம்பரம் பாட்டெல்லாம் கரெக்ட்டா தானே இருக்கு, ஒரிஜினல் மட்டும் இருக்கட்டும், வேற எங்கயும் காபி வச்சிக்க வேண்டாம் என்று சவுண்ட் ரெக்கார்டரிடம் சொல்கிறார்.பிறகு அங்கு வரும் ஐஸ்வர்யா சிதம்பரத்தை பாராட்ட அவர் இதெல்லாம் எதுவும் வெளியில் தெரியாமல் பாத்துக்க என்று சொல்லி அனுப்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X