பல்லவி பற்றி தெரிய வந்த உண்மை.. மாஸ் என்ட்ரி கொடுத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று தீபா ஆபிசுக்கு கிளம்பும் போது, குழந்தை மற்றும் அம்மா மீது கார் மோத வர தீபா இருவரையும் காப்பாற்றுகிறார். அப்போதும் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட தீபா அவர்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறாள். அந்த குழந்தையின் அப்பா தான், சிதம்பரத்தின் கம்பெனியில் வேலை பார்க்கும் சவுண்ட் என்ஜினியர். இவர் தீபாவை பார்த்து இது பல்லவி தானே என்று குழம்புகிறார்.

பின் தீபாவை சிதம்பரம் மிரட்டி பாடவைத்ததை தன் மனைவியிடம் சொல்கிறான். பின் நம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தீபாவிற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று, சவுண்ட் என்ஜினியர் உண்மைகளை சொல்ல கார்த்திகை பார்க்க அலுவலகத்திற்கு வருகிறான்.

zee tamil television Karthigai Deepam serial january 12th full episode

இதையடுத்து,கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், சவுண்ட் எஞ்சினியர் கார்த்திக்கிடம், நீங்க படகு போட்டியில் கலந்து கொண்ட போது உங்களுக்கு பின்னால் துப்பாக்கியுடன் ஆட்களை இறக்கி உங்களை கொன்னுடுவேன் என்று பல்லவியை மிரட்டி தான் சிதம்பரம் பாட வைத்தார் என்ற உண்மையை சொல்லுகிறான். இதை கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். மேலும், பல்லவி மீது எந்த தப்பில்லை என்பதையும் உணர்கிறான்.

உண்மையை மறைத்த சவுண்ட் என்ஜினியர்: அதனை தொடர்ந்து தீபாவை அழைத்து சவுண்ட் என்ஜினியருக்கு வைத்து காபி கொடுக்க அழைத்து. இவர் தான் என் மனைவி அறிமுகப்படுத்த சவுண்ட் என்ஜினியர் குழப்பம் அடைகிறார். ஆனால் இதில் ஏதோ பிரச்சனை இருக்கு என்பதை புரிந்து கொண்ட சவுண்ட் எஞ்சினியர், தீபா தான் பல்லவி என்ற விஷத்தை மறைத்து விடுகிறார். மேலும்,கார்த்திக், சவுண்ட் என்ஜினியரிடம் நீங்க, பல்லவியை பார்த்திருக்கீங்களா என்று கேட்க, அவர் உங்க மனைவி தீபா மாதிரியே தான் இருப்பாங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப பின்னாடியே வந்த தீபா நல்ல வேலை நீங்க உண்மையையே சொல்லல என்று நன்றி சொல்கிறாள்.

அடுத்து நடக்கக்போவது என்ன: பிறகு கார்த்திக் பல்லவிக்கு போன் செய்து நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன், நீங்க என் உயிரை காப்பாற்றணும்னு எந்த அவசியமும் இல்ல, ஆனால் என்னை காப்பாத்தி இருக்கீங்க என்று நன்றி சொல்லி போனை வைக்க தீபா சந்தோஷமடைகிறாள். பிறகு இந்த விஷயத்தை மீனாட்சியிடம் சொல்லி ஆனந்தம் கொள்கிறாள் தீபா. இதையடுத்து, வடநாட்டு கம்பெனி மீட்டிங் தொடங்குகிறது. இதில் சிதம்பரம் கலந்து கொண்டு கார்த்திக் எல்லாம் வர வாய்ப்பே இல்லை என்று சொல்லி கொண்டிருக்க மாஸ் என்ட்ரி கொடுக்கிறான் கார்த்திக். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை, கார்த்திகை தீபம் சீரியலை காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X