சந்திரகலாவுக்கும் சிவனாண்டிக்கும் உள்ள தொடர்பு.. சிக்கிய வீடியோ ஆதாரம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: கார்த்திக், டாக்டரிடம் விபத்து எப்படி நடந்துச்சு என்று விசாரிக்க காரில் ஏறி ஏசி போட்டதும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மயக்கம் வந்து விட்டதாக சொல்ல கார்த்திக்கிற்கு சந்தேகம் வருகிறது. இதையடுத்து, கார்த்திக் விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறான். கார்த்திக் டாக்டரிடம் பேசுவதை, மாயா ஒட்டுக்கேட்டு விடுகிறாள்.

நிச்சயம் கார்த்திக் காருக்கு தான் போவான், அப்போது குளோரோபார்ம் இருந்தா பிரச்சனையாகிவிடும். இதனால், அவன் போவதற்கு முன்பே நாம் அந்த இடத்திற்கு போகவேண்டும் என்று, கார்த்திக் வருவதற்கு முன்பே, விபத்து நடந்த இடத்திற்கு வந்து, ஏசிக்குள் இருக்கும் குளோரோபார்ம் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறாள் மாயா.

zee tamil karthigai deepam

இதையடுத்து, கார்த்திக் விபத்து நடந்த இடத்திற்கு வருகிறான். அதற்கு முன்பாக அங்கு வந்த மாயா ஏசியில் இருந்து குளோரோபார்மை எடுத்து விட, கார்த்திக் காரில் தேடிவிட்டு எதுவுமே இல்லை என்று வீட்டுக்கு திரும்புகிறான். மாயா வீட்டிற்கு வர, மகேஷ் என்னாச்சு என்று கேட்க மாயா நடந்ததை சொல்கிறாள். நல்லவேளை கார்த்திக் மட்டும் உன்னை பார்த்து இருந்தா நேரா இங்க வந்து பிரச்சனை செய்து இருப்பான், துருவி துருவி கேள்வி கேட்டு சிக்க வைத்து இருப்பான் என்று சொல்கிறாள்.

நீ மட்டும் போதும் மாயா: அப்போது, மகேஷ், எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்ல, ரேவதியை கல்யாணம் பண்ணிக்க எனக்கு பிடிக்கவே இல்லை. நீயும் நானும் நல்ல சந்தோஷமா தான் வாழ்ந்து இருக்கோம். இந்த பணம் எல்லாம் நமக்கு வேணாம், நீயும் நானும் சந்தோஷமா இருந்தாலே போதும். நாளைக்கு இந்த விஷயம் மட்டும் ஊருக்கு தெரிஞ்சுதுன்னா, நம்மள இந்த ஊரிலேயே வாழவிடமாட்டாங்க, அது நமக்கே பிரச்சனையாகிடும் என்று சொல்கிறான். இதைக் கேட்டு டென்ஷனான மாயா, என்ன பேசிட்டு இருக்க, இன்னும் நாலு நாள்ல உனக்கு கல்யாணம். அதுக்கு முன்னாடி நீ இப்படி பேசிட்டு இருக்க, கல்யாணத்துக்கு அப்புறம் பணத்தை எல்லாம் சுருட்டி கிட்டு, நாம ஓடிடலாம் அதுவரைக்கும் நீ கொஞ்சம் அமைதியாக இரு என்கிறாள்.

ஆதாரம் சிக்கியது: மறுபக்கம், கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து, மயில்வாகனத்திடம் காரை தரவா செக் பண்ணிட்டேன், எதுவுமே இல்ல. ஆனால் இந்த விஷயத்தில் சந்திரகலா, சிவனாண்டி மட்டுமில்லாமல் இன்னொரு பெண்ணும் சம்மந்தப்பட்டு இருக்கு, அதை கண்டுபிடிக்கணும் என சொல்கிறான். அதன் பிறகு சந்திரகலா சிவனாண்டியை சந்திக்க வர கார்த்திக் அவளை பின்தொடர்ந்து வருகிறான், சந்திரகலா, சிவனாண்டியை சந்தித்து, கார்த்திக் குறித்து பேச, மறைந்திருந்து நோட்டமிடும் கார்த்திக் இதை வீடியோவாக எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X