கார்த்திக், ரேவதி சேர கடவுள் போட்ட முடிச்சு.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி கார்த்திக்கு போன் செய்து, பேத்திகளுக்கு பொங்கலுக்கு துணி எடுத்து கொடுக்கணும் என ஆசையை சொல்ல கார்த்திக் சரி எடுத்து கொடுங்க என சொல்கிறான். பிறகு பாட்டி துணிகளை கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் வாங்கி கொள்கிறான். ஏற்கனவே சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் எல்லோருக்கும் துணி எடுத்துட்டு வர சொல்லி இருந்த நிலையில் கார்த்திக் பரமேஸ்வரி பாட்டி கொடுத்த துணிகளை மாற்றி கொடுத்து விடுகிறான்.

அதன் பிறகு மயில் வாகனம் ரோகிணியிடம் எப்படி சேர்ந்துவிடவேண்டும் என யோசித்து கரண்ட் ஷாக் வைத்து ரோகிணியை காப்பாற்றுவது போல் காப்பாற்றினால், அப்படி இப்படி ரொமான்ஸ் நடக்கும் அதை வைத்துகாப்பாற்றி விடலாம் என பிளான் போடுகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், மயில் வாகனம் எல்லாத்தையும் ரெடி செய்து வைத்து விட்டு ரோகிணிக்காக காத்துக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து அங்கு ரேவதி வர, மயில்வாகனம், இந்த பக்கம் உனக்கு என்ன வேலை, இந்த பக்கம் வராதே என்று சொல்லி அனுப்புகிறான். இதைப்பார்த்த கார்த்திக் என்ன என்று கேட்க, மயில்வாகனம் கரண்ட் ஷாக் விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, ரேவதி அந்த வழியாக வந்துவிட, கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீச, கார்த்திக் ரேவதிக்கு முதலுதவி கொடுத்து காப்பாற்றுகிறான்.

ரேவதியை காப்பாற்றும் கார்த்திக்: ஒயர் வெளியே கிடப்பதை பார்த்த சந்திரகலா, கார்த்திக் தான் இந்த வேலையை செய்து இருப்பான், அவன் வேண்டும் என்றே திட்டம் போட்டு தான் இப்படி செய்ததாக பழி சொல்கிறாள். ஆனால் மயில்வாகனம் நான் தான் இப்படி செய்தேன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி கோபப்படுகிறாள். ரோகிணியோட என்னை சேரவும் விட மாற்றீங்க, அவளும் என்னை நெருங்க விட மாட்டுறா அதனால் தான் இப்படி செய்ததாக சொல்ல கார்த்திக் இருவரையும் ஹனிமூன் அனுப்பி வைக்க சொல்லி ஐடியா கொடுக்க மயில் வாகனம் சந்தோஷப்படுகிறான்.

உதவி கேட்ட ரேவதி: அப்போது அந்த இடத்திற்கு வரும் ரேவதி, கார்த்திக்கிடம் என் உயிரை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. ஆனா, இதோட எனக்கு இன்னொரு உதவியும் செய்ய வேண்டும் என்று கேட்கிறாள். கார்த்திக் என்ன உதவி வேணும்னாலும் செய்யலாம், சொல்லுங்க என்று சொல்கிறான். அப்போது, பொங்கல் பண்டிகைக்கு மாயாவும், மகேஷ் இங்க இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.அவங்க ரெண்டு பேரும் தனியாக தான் பொங்கல் கொண்டாடுவாங்க நீங்கதான் அம்மா கிட்ட சொல்லி எப்படியாவது அவங்கள வர வைக்கணும் என்று சொல்ல கார்த்திக் சரி என்கிறான்.

பொங்கல் கொண்டாட்டம்: இதையடுத்து, சாமுண்டீஸ்வரியிடம் மாயாவும், பொங்கலுக்கு எங்க வீட்டுக்கு வந்தா நல்லா இருக்கும். அவங்க இந்த வீட்ல தனியா தான் பொங்கல கொண்டாடுவாங்க இங்க வந்தாங்கன்னா ரேவதியும் சந்தோஷப்படுவாள் என்று சொன்ன உடனே சாமுண்டீஸ்வரி, சரி அவங்களும் வரட்டும் என்கிறாள். இதையடுத்து, ரேவதி வீட்டு வாசலில் பெரிய கோலம் கோட்டு விட்டு அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் இருக்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி ரேவதியை கோலம் அழியாமல் யார் வெளியில் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு பத்து ஆயிரம் என்று சொல்ல, மகேஷ் கை கொடுத்துமுயற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது.

பலரும் முயற்சி செய்ய கடைசியில், கார்த்திக், ரேவதியின் கையைப்பிடித்து இழுக்க கோலம் கலைந்து போகாமல் வெளியே வந்து,கார்த்திக்கை கட்டிப்பிடித்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X