தீபாவை தாங்கிபிடித்த கார்த்திக்.. செம ரொமான்ஸ் தான் போங்க.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், பொங்கல் பண்டிகையையொட்டி வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும் என வேலை கொடுக்கிறார். அபிராமி திடீரென மயங்கி விழுகிறான். உடனே அனைவரும் வேலையும் அபிராமியே பார்த்ததும் தான் இதற்கு காரணம் என்று இந்த மூன்று மருமகளும் யாராவது ஒருத்தர் இந்த வேலையை பார்க்கட்டும் என சொல்ல அபிராமியும் சாவி கொத்தை கீழே வைக்க ஐஸ்வர்யா நழுவி கொள்ள மீனாட்சி இந்த வாய்ப்பு தீபாவுக்கு கிடைக்க வேண்டும் என சாவியை வாங்க மறுத்து விடுகிறாள்.

பிறகு தீபா சாவியை எடுக்க வர அபிராமி சாவியை எடுத்து யார்கிட்டயும் கெஞ்சிட்டு இருக்க முடியாது விடுங்க என்று சொல்ல தீபா நான் பாத்துக்குறேன் அத்தை என்று சொல்கிறாள். இதனால் அருணாச்சலம் கார்த்திக் தீபாவிடம் சாவியை கொடுக்க சொல்ல முதலில் யோசிக்கும் அபிராமி பிறகு வேறு வழியின்றி சாவியை கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial january 17th full episode

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அபிராமி வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஆட்களை வர சொல்லி அவர்களுக்காக காத்திருக்க அபிராமிக்கு ஒரு போன் கால் வருகிறது. பெயிண்ட் அடிப்பவர்கள் காண்ட்ராக்டர் வீட்டில் வேலை இருப்பதால் இன்னைக்கு வர முடியாது என்று சொல்லிவிட அபிராமி டென்ஷன் ஆகிறார். பொங்கல் நெருங்கிடுச்சு இப்படி கடைசி நேரத்தில் வர முடியாதுன்னு சொன்னா யாரை வைத்து பெயிண்ட் அடிக்கிறது என சத்தம் போட தீபா ரூமுக்குள் வருகிறான்.

பெயிண்டர் கெட்டப்பில் தீபா: ஆனால், தீபா பெயிண்டர் கெட்டப்பில் வெளியே வருகிறாள். இதைப் பார்த்து எல்லோரும் என்ன இது என்று கேட்க நாம எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்கலனா நாமே களத்துல இறங்கிட வேண்டியது தான் என்று சொல்லி அருணாச்சலத்துடன் ஒரு துண்டை கொடுக்கிறாள். தீபா சொல்வதும் சரிதான் முன்னெல்லாம் நம்ம வீட்டுக்கு நாமளே தான் பெயிண்ட் அடிப்போம் இப்பவும் அதே மாதிரி பண்ணிட வேண்டியது தான் என்று சொல்ல ஐஸ்வர்யா நைசாக நழுவ பார்க்க மீனாட்சி இழுத்து கோர்த்து விடுகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial january 17th full episode

தீபாவை தாங்கி பிடிக்கும் கார்த்திக்: அதன் பிறகு எல்லோரும் பெயிண்ட் அடிக்க தொடங்க கார்த்திக் சூப்பர்வைசராக வேலை வாங்குகிறான். ஆனந்தும் மீனாட்சியும் ஒன்றாக சேர்ந்து பெயிண்ட் அடிக்கின்றனர். ஆனந்த் மீனாட்சியிடம் புருஷனை கவனிக்க மாட்டியா என்று ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கார்த்திக் அங்கு வந்துவிட அதை கவனித்த மீனாட்சி கவனிச்சிட்டா போச்சு கண்ணை மூடுங்கள் என்று சொல்லி அங்கிருந்து எஸ்கேப் ஆக கார்த்திக் எதிரே வந்து நிற்க ஆனந்த் அதிர்ச்சி அடைகிறான். அண்ணே என்ன வேலை பண்ண சொன்னா என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க என கலாய்த்து கார்த்திக் அங்கிருந்து நகர்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial january 17th full episode

பாராட்டும் அபிராமி: பிறகு தீபா வீட்டின் பின்புறம் ஏணியில் ஏறி பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஸ்லிப்பாகி கீழே விழ போக கார்த்திக் தாங்கி பிடிக்கிறான்‌. இந்த நேரம் பார்த்து அங்கு வரும் ஆனந்த் என்னை சொல்லிட்டு இப்போ நீங்க என்ன தம்பி பண்றீங்க என்று கார்த்திக்கை கலாய்க்க ஹெல்ப் பண்றேன் என கூறுகிறார். பெயிண்ட் அடிக்கும் வேலை மொத்தமா சிறப்பாக நடந்து முடிய அண்ணாமலை அபிராமி முன்னாடி வைத்து தீபாவை பாராட்ட ஐஸ்வர்யா டென்ஷன் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X