கார்த்திக்கை கட்டிப்பிடித்த ரேவதி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், மயில் வாகனம், கரண்ட் ஷாக் அடிக்கும் படி பிளான் போட்டு வைத்து ரோகிணிக்காக காத்துக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து அங்கு ரேவதி வர, மயில்வாகனம், இந்த பக்கம் உனக்கு என்ன வேலை, இந்த பக்கம் வராதே என்று சொல்லி அனுப்புகிறான். இதைப்பார்த்த கார்த்திக் என்ன என்று கேட்க, மயில்வாகனம் கரண்ட் ஷாக் விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, ரேவதி அந்த வழியாக வந்துவிட, கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீச, கார்த்திக் ரேவதியை காப்பாற்றுகிறான்.
இதைப்பார்த்த சந்திரகலா, கார்த்திக் தான் இந்த வேலையை செய்து இருப்பான், அவன் வேண்டும் என்றே திட்டம் போட்டு தான் இப்படி செய்ததாக பழி சொல்கிறாள். ஆனால் மயில்வாகனம் நான் தான் இப்படி செய்தேன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி கோபப்படுகிறாள். ரோகிணியோட என்னை சேரவும் விட மாட்றீங்க, அவளும் என்னை நெருங்க விட மாட்டுறா அதனால் தான் இப்படி செய்ததாக சொல்ல கார்த்திக் இருவரையும் ஹனிமூன் அனுப்பி வைக்க சொல்லி ஐடியா கொடுக்க மயில் வாகனம் சந்தோஷப்படுகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியிடம் மாயாவும், பொங்கலுக்கு வீட்டுக்கு வந்தா நல்லா இருக்கும். அவங்க இந்த வீட்ல தனியா தான் பொங்கல கொண்டாடுவாங்க இங்க வந்தாங்கன்னா ரேவதியும் சந்தோஷப்படுவாள் என்று சொன்ன உடனே சாமுண்டீஸ்வரி, சரி அவங்களும் வரட்டும் என்கிறாள். இதையடுத்து, ரேவதி வீட்டு வாசலில் பெரிய கோலம் கோட்டு விட்டு அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் இருக்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி ரேவதியை கோலம் அழியாமல் யார் வெளியில் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு பத்து ஆயிரம் ரூபாய் என்று சொல்ல, மகேஷ் கை கொடுத்து வெளியில் இழுக்க முயற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
பலரும் முயற்சி செய்ய கடைசியில், கார்த்திக், ரேவதியின் கையைப்பிடித்து இழுக்க கோலம் அழியால் வெளியே வந்து,கார்த்திக்கை கட்டிப்பிடித்த விடுகிறாள். இதைப்பார்த்த சந்திரவிற்கு கோவத்தில் கொந்தளித்து கொண்டு,மறுபக்கம் மாயா, மகேசைப்பார்த்து இதுக்கூட உன்னால சரியாக செய்யமுடிவில்லை என மாயா திட்டிக்கொண்டு இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











