சந்திரகலாவின் அயோக்கிய தனம்.. சாமுண்டீஸ்வரியிடம் படம் போட்டு காண்டிய கார்த்திக்..கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் அவ கையால இந்த கலசத்துக்கு பூஜை பண்ணி கும்பாபிஷேகத்தை நல்லபடியா நடத்தி முடிக்கிறேன் என்று சொல்கிறாள். இதையடுத்து கோவில் கட்டும் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கலசத்தை உங்க வீட்ல வச்சு பத்திரமா பூஜை பண்ணி கொண்டு வாங்க என்று சொல்கின்றனர். மேளதாளத்துடன் தடபுடலாக ஊர் மக்கள் கலசத்தை கொண்டு சாண்டீஸ்வரி வீட்டில் கொடுக்கின்றனர்.

சந்திரகலா மற்றும் சிவனாண்டி என இருவரும் சந்தித்து கலசத்தை வீட்டுக்கு கொண்டு வந்ததும் அதை திருடி விடலாம். சாமுண்டீஸ்வரி தலை குனிந்து நிற்பான் அதே நேரத்தில் டிரைவர் கார்த்திக் மேல பழியை போட்டா அவனையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாள். ஒரே கல்லில் இரண்டு மாங்கா என திட்டம் போடுகின்றனர். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியல், சந்திரகலா இரவோடு இரவாக திட்டம்போட்டு கலசத்தை மறைத்துவைத்து விடுகிறாள். இதையடுத்து மறுநாள் காலை, சாமுண்டீஸ்வரி பூஜை அறைக்கு சென்ற போது, கசலம் இல்லாததைப் பார்த்து, அதிர்ச்சி அடைகிறாள், இதைத்தொடர்ந்து, சந்திரகலா, எனக்கு கார்த்திக் மீது தான் சந்தேகமாக இருக்கு அவன் தான் பூஜை அறையில் இருந்தான் என்று சொல்ல, கார்த்திக் கோவப்பட்டு நான் சாமி கும்பிடத்தான் போனேன், நான் எதுக்கு கலசத்தை எடுக்க போகிறேன் என்று சொல்கிறான். அப்போது, சந்திரகலா, உனக்கு ரேவதிக்கு கல்யாணம் நடப்பது பிடிக்கல, அதனால நீ தான் கலசத்தை திருடி இருப்ப என்று சொல்லிவிட்டு, கார்த்திக்கின் அறை மற்றும் காருக்கு சென்று பார்க்க சொல்கிறாள்.

வசமாக சிக்கிய சந்திரகலா: இதைத்தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி மயில்வாகனத்தை அழைத்து கார்த்திக்கின் ரூம் மற்றும் காரில் சென்று பார்க்கும் படி கூறுகிறாள். மயில்வாகனம் சென்று காரில் பார்த்துவிட்டு, எந்த இடத்திலும் கலசம் இல்லை என்று சொல்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரகலா, நாம தானே காரில் கலசத்தை மறைத்து வைத்தோம். அந்த இடத்திலிருந்து கலசம் இல்லையே என்று குழப்பம் அடைகிறாள். இதைத்தொடர்ந்து பேசிய கார்த்திக் என் அறையில் சோதனை செய்தது போல, இங்க இருக்கும் அனைவர் அறையிலும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் அனைவரின் அறைகளிலும் சோதனை செய்கின்றனர் அப்பொழுது சந்திரகலா அறையில் இருந்து கலசம் எடுக்கப்படுகிறது.

இதை பார்த்து சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்து, சந்திரலேகா உன் அறையில் கலசம் எப்படி வந்தது என்று கேட்க, என்ன சொல்லுவது என்றே தெரியாமல் முழிக்கிறாள். அதன்பின், கார்த்திக்கின் அறைக்கு வரும் மயில்வாகனன், சந்திரகலா உன்னை இந்த வீட்டில் இருந்து விரட்ட திட்டம் போடுகிறாள். அவள் சிவானான்டியின் மனைவி, அவர் கூட வாழாமல் இந்த வீட்டில் இருக்கிறாள் என்று சொல்ல கார்த்திக், இப்போது தான் எல்லா விஷயமும் புரிகிறது என்கிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X