கார்த்திக்கை கட்டிப்பிடித்த ரேவதி.. கடுப்பான மகேஷ்.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்
சென்னை: பொங்கலுக்கு ரேவதி கோலத்தை போட்டுவிட்டு, வெளியில் வரமுடியாமல் இருக்க, அப்போது, சாமுண்டீஸ்வரி கோலம் அழியாமல் யார் ரேவதியை வெளியில் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு பத்து ஆயிரம் என்று சொல்ல, மகேஷ் கை கொடுத்து முயற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது. பலரும் முயற்சி செய்ய கடைசியில், கார்த்திக், ரேவதியின் கையைப்பிடித்து இழுக்க கோலம் கலைந்து போகாமல் வெளியே வந்து, கார்த்திக்கை கட்டிப்பிடித்து விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ரேவதி பொங்கல் வைக்க பொங்கல் பொங்கி வருவதை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அதன்பின், அனைவரும் ஏதாவது விளையாட்டு விளையாடலாம் என்று மயில்வாகனம் சொல்ல, கண்ணை கட்டி கண்ணாமூச்சி விளையாடலாம் என்று பிளான் போட்டு, மயில்வாகனத்தின் கண்ணை கட்டி, நீங்கள் ரோகிணியை சரியாக கண்டுபிடித்துவிட வேண்டும் என்று சொல்லி, அவனை சுற்றி விட, மயில்வாகனம் மரத்தை கட்டி பிடித்து விடுகிறான். இதைப்பார்த்த ரோகிணி, உனக்கு பொண்டாட்டி யாருனு தெரியல, இதுல, ஹனிமூன் கேட்குதா என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர்.

கார்த்திகை கட்டிப்பிடிக்கும் ரேவதி: இதைத் தொடர்ந்து மகேஷின் கண் கட்டப்பட்டு, ரேவதியை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல, அவர் நேராக மாயாவை கட்டிப்பிடித்து விடுகிறான். இதை பார்த்து ரேவதி சங்கடப்படுகிறாள். அதன் பின் மீண்டும் ரேவதியின் கண் கட்டப்பட்டு, அவளை சுற்றி விடுகின்றனர். அவள் நேராக கார்த்திக்கை கட்டிப்பிடித்து, அவரின் கையை பிடித்துக் கொண்டு, இவர் தான் என்னுடைய கணவர், இன்று பிடித்த இந்த கையை நான் எப்போதுமே விடமாட்டேன் என்று பேசிக்கொண்டே கண் கட்டை கழட்டி பார்த்து, அது கார்த்திக் என தெரிய வர அதிர்ச்சி அடைகிறாள். கார்த்திகை கட்டிபிடித்துவிட்டோமே என்ற சோகத்தில், சாரி கார்த்திக் மகேஷூம் பச்சை சட்டை போட்டு இருந்ததால், குழப்பமாகிவிட்டது என்று சொல்லி வருத்தப்படுகிறாள் ரேவதி.
கடுப்பில் சந்திரகலா: அப்போது, சாமுண்டீஸ்வரி இதுக்கு ஏன் வருத்தப்படுற இது விளையாட்டுதானே என்று சொல்ல, அப்போது, கடுப்பான சந்திரகலா, இது எதச்சியா நடக்குதா? இல்ல கார்த்திக் பிளான் போட்டு எல்லாத்தையும் செய்றானானு தெரியல. கோலம் போட்டியிலும் இவன் தான் ரேவதியை தூக்குறான், நேத்து ஷாக் அடிக்கும் போதும் இவன் தான் வந்து காப்பாத்துறான். இதெல்லாம் பார்க்கும்போது எல்லாமே ஏதோ ப்ளான் மாதிரி தான் தெரியுது. இவனை இந்த வீட்டுல இருந்து துரத்திவிட வேண்டும் என மனசுக்குள்ள கார்த்திக்கை திட்டிக்கிட்டு இருக்கிறாள் சந்திரகலா.
மாறு வேடத்தில் வீட்டிற்கு வரும் பாட்டி: இந்த நேரம் பார்த்து கார்த்திக்கு, போன் செய்யும் பரமேஸ்வரி பாட்டி, நான் வாங்கி கொடுத்த புது துணியை எல்லாரும் போட்டாங்களா என்று கேட்க, கார்த்திக், எல்லாரும் அந்த புது துணி போட்டு தான் பொங்கல் கொண்டாடிட்டு இருக்காங்க என்று சொல்ல, உடனே பாட்டி, நான் என் பேத்தியை கண்ணால பாக்க வேண்டும் என்று சொல்ல, இந்த நேரத்துல நீங்க வந்தீங்கன்னா சரியா இருக்காது அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறான். ஆனால், பாட்டி, நான் சாமுண்டீஸ்வரி வீட்டு வாசலில் தான் நிற்கிறேன் என்று சொல்ல கார்த்திக் வெளியே வருகிறான்.
யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக பாட்டி சாமியார் வேஷத்துல இருக்க, கார்த்திக் இது என்ன வேஷம் என்று கேட்க, எனக்கு என் பேத்திகளை பார்க்க வேண்டும் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று சொல்ல, கார்த்திக் பாட்டியை சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











