பேத்தியை பார்க்க ஆசைப்பட்ட பாட்டி.. சாமுண்டீஸ்வரி என்ன செய்ய போகிறாள்.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: கார்த்திக்கு, போன் செய்யும் பரமேஸ்வரி பாட்டி, நான் வாங்கி கொடுத்த புது துணியை எல்லாரும் போட்டாங்களா என்று கேட்க, கார்த்திக், எல்லாரும் அந்த புது துணி போட்டு தான் பொங்கல் கொண்டாடிட்டு இருக்காங்க என்று சொல்ல, உடனே பாட்டி, நான் என் பேத்தியை கண்ணால பாக்க வேண்டும் என்று சொல்ல, இந்த நேரத்துல நீங்க வந்தீங்கன்னா சரியா இருக்காது அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறான்.

ஆனால், பாட்டி, நான் சாமுண்டீஸ்வரி வீட்டு வாசலில் தான் நிற்கிறேன் என்று சொல்ல கார்த்திக் வெளியே வருகிறான். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக பாட்டி சாமியார் வேஷத்துல இருக்க, கார்த்திக் இது என்ன வேஷம் என்று கேட்க, எனக்கு என் பேத்திகளை பார்க்க வேண்டும் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: கார்த்திக்கு எவ்வளவு சொல்லியும் கேட்காத பாட்டி, நான் வீட்டுக்குள்ள வந்து பேத்திகளை பாத்தே ஆகணும். இந்த வருஷம் பொங்கல என் பேத்திகளோட கொண்டாட்டிட்டா நிம்மதியா என் ஆயுசு முடிந்துவிடும் என்று சொல்ல, கோவப்படும் கார்த்திக், இனிமே அப்படி எல்லாம் சொல்லாதீங்க பாட்டி. இப்ப என்ன உங்களுக்கு பேத்திகளை பாக்கணும் அவ்வளவு தானே வாங்க போலாம் என்று வீட்டுக்குள்ள அழைத்து செல்கிறான்.

அனைவருக்கும் பொங்கல் பரிசு: வீட்டிக்குள் வரும் பரமேஸ்வரி பாட்டி, நான் இந்த ஊர்ல மிகப்பெரிய சாமியாரு நான் போகாத ஊரு இல்ல, போகாத கோவில் இல்ல இந்த வழியா வந்துட்டு இருந்தேன். அப்போது தான் இந்த தம்பி என்னை அழைச்சிட்டு வந்தான், உங்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லிட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு போகலானும் வந்தேன் என்று சொல்ல, அனைவரும் பாட்டியின் காலில் விழுகின்றனர். பாட்டியும் அவர்களுக்கு ஆசிர்வாதம் பண்ணி நூறு ரூபாயை கையில் கொடுத்துக்கொண்டு இருக்கிறாள்.

ஆசீர்வாதம் வாங்கிய சாமுண்டீஸ்வரி: அப்போது, கார்த்திக், சாமுண்டீஸ்வரி பார்த்தாங்கன்னா பிரச்சனை ஆகிவிடும், அவங்க வருவதற்குள் போய்விடலாம் என்று சொல்ல பாட்டி கிளம்பும் நேரம், சாமுண்டீஸ்வரி யாரு இவங்க என்று கேட்க,கார்த்திக் இவங்க ஒரு சாமியாரு வீட்ல அனைவருக்கும் ஆசிர்வாதம் பண்ண வந்தாங்க என்று சொல்லி சமாளிக்கிறான். எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிட்டாங்களா, அப்படினா எனக்கும் ஆசிர்வாதம் பண்ணட்டுமே என்று சாமுண்டீஸ்வரி சொல்ல, உடனே பாட்டி, நான் முன் வைத்த கால பின்வைக்கக்கூடாது, நான் எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிட்டு கிளம்பிய பிறகு, திரும்பி வீட்டுக்குள் வந்து ஆசீர்வாதம் பண்ண மாட்டேன் என்கிறார்.

வீடியோ எடுத்த சந்திரகலா: உடனே சாமுண்டி சரி நீங்க வரலைன்னா என்ன நான் உங்களிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன் என்று பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அந்த நேரம் பார்த்து விபூதி வைப்பது போல புகையை ஊதி விட்டுட்டு பாட்டியும் அங்க இருந்து வெளியே வந்துடறாங்க. பாட்டி வெளியில போனதும் கார்த்திக்கும் பின்னாடியே வருகிறார். இதை பாத்த சந்திரகலா என்ன பாட்டி போனதும், டிரைவரும் பின்னாடியே போறானே, இதில் ஏதோ இருக்கு என்று, ஒளிஞ்சிருந்து பார்க்கிறார் சந்திரகலா. அப்போது,பாட்டியும் கார்த்திக்கும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சந்தேகப்படும் சந்திரகலா, இருவரையும் வீடியோ எடுத்துவைத்துக்கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X