தீபாவை சிக்க வைக்க கார்த்திக் போடும் பிளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், சிதம்பரம் பல்லவி உங்கபக்கத்துல இருந்தாலும் உங்களால் அவங்களை கண்டுபிடிக்க முடியாது. அப்படியே தெரிந்தாலும் அது உங்களுக்குத்தான் கஷ்டம் என சொல்லியதையும், பத்து நாளில் பல்லவியை தேடி கண்டுபிடித்து உங்க முன் நிறுத்துவேன் என்று கார்த்திக் விட்ட சவாலை நினைத்துப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

உடனே ரூமுக்கு வரும் இளையராஜாவிடம், கார்த்திக் எனக்கு தெரிஞ்சு பல்லவி எனக்கு தெரிந்தவராகத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன், அதனாலதான் சிதம்பரம் அப்படி சொல்லி இருக்கார் என்று சொல்லிக்கொண்டு இருக்க, ஆசிரமத்தில் இருந்து சிஸ்டர்ஸ் சிலர் வந்து, பல்லவி பாடிய பாடல் குழந்தைகள் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து விட்டது. அவர்களை அசிரமத்திற்கு வந்து பாடினால், குழந்தைகள் சந்தோஷப்படுவார்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு ஓகே சொல்லி கார்த்திக் அனுப்பி வைக்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial january 23rd full episode

இதையடுத்து, பல்லவியை பார்த்த சவுண்ட் இன்ஜினியர் வீட்டுக்கு செல்ல, வீடு பூட்டப்பட்டு இருக்கவே பக்கத்தில் விசாரிக்க யாரோ 4 ரவுடிகள் வந்து அவர்களை அடித்து விட்டு சென்றதாகவும் ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் சொல்ல இருவரும் கிளம்பி ஹாஸ்பிடல் வருகின்றனர். சவுண்ட் இன்ஜினியர் மனைவியை சந்தித்து நடந்தவற்றை கேட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே கார்த்திக். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்

zee tamil television Karthigai Deepam serial january 23rd full episode

தீபாவிடம் கெஞ்சும் ரூபஸ்ரீ: இதையடுத்து, பல்லவியை கண்டுபிடிக்க பிளான் போட்ட இளையராஜா, கோகிலாவை பிடித்துவைத்துக்கொண்டு ரூபஸ்ரீ மிரட்டுகிறார். பல்லவி வந்து பாடியே ஆகணும் இல்லனா கோகிலாவை விடமாட்டோம் என்று சொல்லி மிரட்ட ரூபஸ்ரீ அதிர்ச்சி அடைகிறாள். உடனே தீபாவுக்கு போன் போட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் பாடி கொடு என்று கெஞ்ச தீபா இனிமே அவர ஏமாத்திட்டு வந்து நான் பாட மாட்டேன் என மறுத்து விடுகிறாள். இது கார்த்திக்கு செய்ற பிராயசித்தமா இருக்கட்டும் இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடு என ரூபஸ்ரீ கெஞ்சி கூத்தாட தீபா பாடுவதற்கு ஒப்புக்கொள்கிறார்.

zee tamil television Karthigai Deepam serial january 23rd full episode

பாட்டு பாடும் பல்லவி: மேலும் பாட்டு பாடுவதற்காக கண் பார்வை அற்ற குழந்தைகளின் ஆசிரமத்திற்கு வர சொல்ல தீபாவும் அங்கு செல்ல ரூபஸ்ரீ பல்லவியாக அறிமுகம் செய்து வைக்கிறாள். குழந்தைகள் எல்லோரும் தீபாவின் கையைப் பிடித்து உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு உங்க பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என பேசுகின்றனர். வீட்டுக்கு வரும் தீபா, மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்ல மீனாட்சி வேண்டாம் நீ போகாத என்று சொல்ல தீபா இந்த ஒரு முறை பாடி கொடுக்கிறேன் என சொல்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial january 23rd full episode

அவமானப்படுத்தும் அபிராமி: அடுத்ததாக வீட்டுக்கு கெஸ்ட் வர அபிராமி அவர்களை அழைத்து உட்கார வைத்து உபசரிக்கிறார். கல்யாணத்துக்காக பத்திரிக்கை வைக்க வந்திருந்த அவர்களிடம் உங்க பொண்ணோட கல்யாண புடவையை நான் தான் எடுத்து கொடுப்பேன் என சொல்கிறார். அதன் பிறகு தன்னுடைய மருமகள்கள் என ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சி அறிமுகம் செய்யும் அபிராமி தீபாவை அறிமுகம் செய்யும்போது கார்த்தியோட பொண்டாட்டி என சொல்கிறாள். இதனால் தீபா வருத்தப்பட்டு நிற்கிறாள். அப்போது அங்கு வரும் கார்த்திக், அம்மா சொன்னது நெனச்சு கவலைப்படுறீங்களா என்று ஆறுதல் கூறுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X