கார்த்திக், ரேவதி பற்றி சுவற்றில் அசிங்கமாக எழுதிய மாயா.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கார்த்திக் பெயரை கெடுக்க திட்டம் போட்ட மாயா, இந்த ஊரில் இருக்கும் அனைவரின் வீட்டு சுவரிலும் கார்த்திக் லவ்ஸ் ரேவதினு எழுதிவைக்கிறாள். இதை பார்த்த சாமுண்டேஸ்வரி அதிர்ச்சி அடைந்து, இது எல்லாம், அந்த சிவனாண்டி தான் பண்ணி இருப்பான் என்று துப்பாக்கியை எடுத்து கொண்டு கோபமாக ஏய் சிவனாண்டி என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த இப்படியெல்லாம் செய்வ.. அசிங்கமா இல்லையா என்று ஆவேசப்படுகிறாள்.
அப்போது சிவனாண்டி உன் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தணும் என்பது தான் என்னுடைய எண்ணம். அதுக்காக இப்படியெல்லாம் கேவலமாக நடந்துக்க மாட்டேன், கல்யாணத்தை நிறுத்த ஆயிரம் வழி இருக்கு என்று பதிலடி கொடுக்கிறான். இவர்கள் இருவரும் பேசுவதையெல்லாம் மாயா தூரத்தில் நின்று ஒட்டு கேட்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இது யார் செய்த வேலை: இன்றைய எபிசோடில்,வீட்டிற்கு வந்த சாமுண்டேஸ்வரி, ரேவதி மற்றும் கார்த்திக்கிடம் இதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட கூடாது.. தைரியமா இருக்கனும். எனக்கு என் பொண்ணு மேலயும் டிரைவர் மேலயும் நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறாள். அதைத்தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து, உன் மேல ஒரு பழி விழுந்திருக்கு.. அது மட்டுமில்லாமல் இந்த கேவலமான வேலையை செய்தது யார் என்பதை நீ தான் கண்டு பிடித்து உன் மேல தப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சொல்ல, கார்த்தியும் சரி என்கிறான்
ரேவதி மனதில் வன்மத்தை விதைக்கணும்: மறுபக்கம் சந்திரகலா மாயாவை பார்க்க வீட்டிற்கு வந்து, சுவரில் ரேவதி, கார்த்திக் பெயரை எழுதியது நீ தானே, இதெல்லாம் உன் வேல தானே என்று கேட்க, மாயா ஆமாம் என்று சொல்கிறாள். கார்த்திக் ஒவ்வொரு முறையும் நல்ல பேர் எடுத்துட்டே போறான். நாளைக்கு கல்யாணத்தில் உங்கள பத்தி உண்மை தெரிந்தா சாமுண்டேஸ்வரி கார்த்தியை தாலி கட்ட சொல்ல வாய்ப்பிருக்கு. சாமுண்டேஸ்வரி அப்படி ஒரு முடிவு எடுத்தா கூட ரேவதி, கார்த்திகை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க கூடாது. அவ மனசுல கார்த்தியை பத்தி தப்பான எண்ணம் வரணும். அதுக்கு அவ மனசில் கார்த்திகை பத்தி தவறான எண்ணம் வரவேண்டும் என்று அதுக்கு எதாவது செய்யுங்க என்று சொல்கிறாள் சந்திரகலா. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து கவனித்த மகேஷ், சந்திரகலா சென்றதும் அவங்க சொல்றது உண்மை தான், ரேவதி மனதில் சந்தேகத்தை விதைக்கணும் என்று சொல்கிறான்.
கார்த்திகை நம்பாதே: மறுபக்கம் வீட்டில், கார்த்திக் மயில் வாகனத்திடம் என்னை இந்த வீட்டை விட்டு வெளியே துரத்த நிறைய சதி நடக்குது, இதுல சந்திரகலாவுக்கும் பங்கு இருக்கு என்று சொல்கிறான். சந்திரகலா ரேவதியை அழைத்து சென்று இந்த டிரைவரை நம்பாத.. அக்கா சொன்னதும் உன் கழுத்தில மோதிரம் போட தயாராகிட்டான். உன் கழுத்தில் தாலி கட்டவும் திட்டம் போடலாம் என்று அவர்களின் திட்டம் போல, ரேவதி மனதில் வன்மத்தை விதைக்க முயற்சி செய்கிறாள்.
சரியான பதிலடி கொடுத்த சாமுண்டீஸ்வரி: பிறகு ஸ்டுடியோவில் இருந்து நிச்சயதார்த்த ஆல்பம் ரெடியாகி விட்டதாக போன் வர, ரேவதி அதை வாங்க கிளம்ப சாமுண்டேஸ்வரி கார்த்திக்கையும் கூட அழைத்து போ என சொல்கிறாள். இதைக்கேட்ட சந்திரகலா, ஏற்கனவே இவங்களை பத்தி எல்லா செவுத்துலயைம் எழுதி வைச்சு இருக்காங்க, இப்போது எதுக்கு இரண்டு பேரும் ஒன்னா போக வேண்டும் என்று சொல்ல, கடுப்பான சாமுண்டீஸ்வரி, ஊர் உலகத்துல ஆயிரம் பேசுவாங்க.. அதை சரி செய்ய தானே மகேஷ்க்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடக்க போகுது என பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











