மகேஷூடன் தகாத உறவு.. கர்ப்பமாக இருக்கும் மாயா.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: மாயா வீட்டிலிருந்து வீட்டுக்கு வரும் சந்திரகலா, ரேவதியை அழைத்து சென்று இந்த டிரைவரை நம்பாத.. அக்கா சொன்னதும் உன் கையில மோதிரம் போட தயாராகிட்டான். அப்போ, உன் கழுத்தில் தாலி கட்டவும் திட்டம் போடுகிறான். இவன் தான் ஊரில் இருக்கும் சுவற்றில் எல்லாம் உன் பெயரையும் அவன் பெயரையும் எழுதி இருப்பார் என்று, ரேவதி மனதில் வன்மத்தை விதைக்க முயற்சி செய்கிறாள்.
பிறகு ஸ்டுடியோவில் இருந்து நிச்சயதார்த்த ஆல்பம் ரெடியாகி விட்டதாக போன் வர, ரேவதி அதை வாங்க கிளம்ப சாமுண்டேஸ்வரி, கார்த்திக்கையும் கூட அழைத்து போ என சொல்கிறாள். இதைக்கேட்ட சந்திரகலா, ஏற்கனவே இவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறார்கள் என்று எழுதி வைச்சு இருக்காங்க, இப்போது எதுக்கு இரண்டு பேரும் ஒன்னா போக வேண்டும் என்று சொல்ல, கடுப்பான சாமுண்டீஸ்வரி, ஊர் உலகத்துல ஆயிரம் பேசுவாங்க.. அதை சரி செய்ய தானே மகேஷ்க்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடக்க போகுது என்கிறார்.

கார்த்திகை தீபம் சீரியல்: இதையடுத்து, இன்று போட்டோவை வாங்க செல்வதற்கு முன்பாக இன்விடேஷனை தேர்வு செய்ய செல்கின்றனர், ரேவதிக்கு எந்த டிசைன் தேர்வு செய்வது என்ற குழப்பம் இருப்பதால், கார்த்திக்கிடம் இது எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள். கார்த்திக்கும் ஒரு டிசைனை தேர்வு செய்து கொடுக்கிறான். அடுத்ததாக, இருவரும் நிச்சயதார்த்த போட்டோவை வாங்க செல்கின்றனர், அப்போது அந்த போட்டோவில் மாயா பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து கார்த்திக் அதிர்ச்சி ஆகிறான், டாக்டரின் மகள், ஒரு பிங்க் கலர் புடவை கட்டிய ஆன்டி தான் கையை பேனில் விட்டதாக சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்கிறான்.
பயந்து போன மாயா: அடுத்து ரேவதி போட்டோவுடன் நேராக மகேஷ் வீட்டிற்குசெல்கிறாள், அப்போது மாயா நிச்சயதார்த்த போட்டோவில் பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ரேவதி கிளம்பியதும் மகேஷிடம் கார்த்தி மட்டும் அந்த போட்டோவை பார்த்தா நான், மல்லிகா டாக்டரின் மகளை காயப்படுத்தினேன் என்பது தெரிந்துவிடம் என்று சொல்லிவிட்டு அந்த போட்டோவை எப்படியாவது கார்த்திக் கண்ணில் படாமல் எடுத்து வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்
போட்டோவை திருடும் மாயா: வீட்டிற்கு வரும் ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் நிச்சயதார்த்த போட்டோவை காட்டுகிறாள். இந்த சமயத்தில் மாயா வீட்டிற்கு வருகிறாள். சாமுண்டேஸ்வரி என்ன மாயா திடீரென வந்து இருக்கீங்க என்று கேட்க ஸ்வீட் செய்தேன், உங்களுக்கும் கொண்டு வந்தேன் என்று சொல்லி வீட்டிற்குள் நுழைகிறாள். பிறகு ரேவதியிடம் அந்த நிச்சயதார்த்த போட்டோவை கொஞ்சம் கொடுமா, நான் சரியாக பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு. ரேவதியிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டு அவளை திசை திருப்பி அந்த போட்டோவை மட்டும் எடுத்து மறைத்து விடுகிறாள். பின் வெளியே வந்த மாயா, அந்த போட்டோவை எரிந்து கொண்டிருந்த தீயில் வீசி விட்டு நிம்மதியுடன் செல்கிறாள்.
அதை தொடர்ந்து பாதி எரிந்த போட்டோ காற்றில் பறந்து வந்து கார்த்தியின் கால் அருகே விழ அதை எடுத்து பார்த்த கார்த்திக் இது அந்த போட்டோ தானே என்று சந்தேகம் அடைகிறான். போட்டோவை எடுத்துக்கொண்டு மயில்வாகனத்திடம் போகும் கார்த்திக், அந்த போட்டோவில் இருப்பவர்கள் தான் 3வது எதிரி என்று சொல்ல, மயில்வாகனம் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அடுத்து, மாயா இப்போ கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார் கார்த்திக். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











