உண்மையை மறைக்கும் கார்த்திக்..சிக்குவாளா தீபா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், பல்லவியை கண்டுபிடிக்க பிளான் போட்ட இளையராஜா, கோகிலாவை பிடித்துவைத்துக்கொண்டு ரூபஸ்ரீ மிரட்டுகிறார். பல்லவி வந்து பாடியே ஆகணும் இல்லனா கோகிலாவை விடமாட்டோம் என்று சொல்லி மிரட்ட, அதிர்ச்சி அடைந்த ரூபஸ்ரீ, தீபாவுக்கு போன் போட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் பாடி கொடு என்று கெஞ்ச தீபா இனிமே அவர ஏமாத்திட்டு வந்து நான் பாட மாட்டேன் என மறுத்து விடுகிறாள்.

இது கார்த்திக்கு செய்ற பிராயசித்தமா இருக்கட்டும் இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடு என ரூபஸ்ரீ கெஞ்ச தீபா பாடுவதற்கு சம்மந்தம் என்கிறாள். இதையடுத்து, வீட்டுக்கு வரும் தீபா, மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்ல மீனாட்சி வேண்டாம் நீ போகாத என்று சொல்ல தீபா இந்த ஒரு முறை பாடி கொடுக்கிறேன் என சொல்கிறார். இதையடுத்து இந்த எபிசோடு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial january 24rd full episode

கடவுளிடம் வேண்டும் தீபா: இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடில், கோகிலா ரவுடிகளிடம் சிக்கி கொண்டதை நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாள் ரூபஸ்ரீ. மறுபக்கம் கோகிலா ரவுடிகளிடம் தப்பிக்க ப்ளான் போட்டு பாத்ரூம் போகணும் கட்டை அவிழ்த்து விடுங்கடா என சொல்ல ரவுடிகள் முடியாது என மறுக்கின்றனர். இதையடுத்து, தீபா சாமி முன்னால் நின்று இந்த ஒருமுறை கார்த்திக்கு தெரியாமல் பாட போறேன், இந்த முறை மட்டும் அவர் கண்ணுல படாமல் காப்பாற்ற வேண்டும், ஆனால், பாட்டு பாடி முடிச்சதும் உண்மையை சொல்லிட போறேன் என வேண்டுகிறாள்.

அடுத்து நடப்பது என்ன: அங்கு வரும் கார்த்திக் முக்கியமான விஷயம் காரணமாக வெளியே செல்வதாக சொல்ல தீபா பூஜை செய்து ஆரத்தி காட்டி அனுப்பி வைக்கிறாள். கார்த்திக் தீபாவிடம் பல்லவியை கண்டுபிடிக்க செல்லும் விஷயத்தை மறைத்து வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X