கார்த்திக்கு டிமிக்கி கொடுத்த கோகிலா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கோகிலா ரவுடிகளிடம் சிக்கி கொண்டதை நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாள் ரூபஸ்ரீ. மறுபக்கம் கோகிலா ரவுகளிடம் தப்பிக்க ப்ளான் போட்டு பாத்ரூம் போகணும் கட்டை அவிழ்த்து விடுங்கடா என சொல்ல ரவுடிகள் முடியாது என மறுக்கின்றனர்.

இதையடுத்து, தீபா சாமி முன்னால் நின்று இந்த ஒருமுறை கார்த்திக்கு தெரியாமல் பாட போறேன், இந்த முறை மட்டும் அவர் கண்ணுல படாமல் காப்பாற்ற வேண்டும், ஆனால், பாட்டு பாடி முடிச்சதும் உண்மையை சொல்லிட போறேன் என வேண்டுகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial january 25rd full episode

அங்கு வரும் கார்த்திக் முக்கியமான விஷயம் காரணமாக வெளியே செல்வதாக சொல்ல தீபா பூஜை செய்து ஆரத்தி காட்டி அனுப்பி வைக்கிறாள். கார்த்திக் தீபாவிடம் பல்லவியை கண்டுபிடிக்க செல்லும் விஷயத்தை மறைத்து வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பார்க்கலாம்

கார்த்திகை தீபம் சீரியல்: அதாவது, கோகிலா ரவுடிகளிடம் பாத்ரூம் போக வேண்டும் என அடம் பிடிக்க ஒரு கட்டத்தில் ரவுடிகளும் பாவம் பார்த்து கயிற்றை அவுத்து விட கோகிலா அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிறார். இதனைத் தொடர்ந்து ரூபஸ்ரீ வீட்டில் டென்ஷனாக உட்கார்ந்து இருக்க அப்போது யாரோ கதவைத் தட்ட கார்த்தி என பதற்றத்துடன் கதவைத் திறக்க கோகிலா நிற்பதை பார்த்து சந்தோஷமாகிறாள்.

நமக்கு என்ன பிரச்சனை: பிறகு தீபாவுக்கு போன் போட்டு பாட போக வேண்டாம் என சொல்ல முயற்சி செய்ய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் ரூபஸ்ரீ தீபா பாடுவதில் நமக்கு பிரச்சனை எதுவும் கிடையாது. ஆனால் கார்த்திக்கு பல்லவி தீபா தான் என்ற உண்மை தெரியக்கூடாது என முடிவெடுக்கிறாள். உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு கார்த்திக் கண் பார்வையற்ற குழந்தைகள் ஆசிரமத்திற்கு போக விடாமல் தடுத்து நிறுத்த சொல்கிறாள். இதை எடுத்து ரவுடிகள் கார்த்தியை பாலோ செய்ய மறுப்பக்கம் தீபா ஆசிரமத்திற்கு வந்து சேர்கிறாள்.

அடுத்து நடப்பது என்ன: ஆசிரமத்தில் கார்த்திக் ஆர்டர் செய்த ஸ்பெஷலான உணவு வந்திருந்தாலும் பல்லவி பாட்டை கேட்காமல் சாப்பிட மாட்டோம் என குழந்தைகள் அடம்பிடித்துக் கொண்டே இருப்பதாக ஆசிரமத்தின் நிர்வாகிகள் சொல்ல தீபா முதலில் நீங்க எல்லாரும் சாப்பிடுங்க உங்களோட சேர்ந்து நானும் சாப்பிடுகிறேன் என சாப்பிட உட்காருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X