மாயாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? கார்த்திக்கிடம் சிக்கி கருத்தடை மாத்திரை.. கார்த்திகை தீபம்!
சென்னை: நிச்சயதார்த்த போட்டோவில் மாயா பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து கார்த்திக் அதிர்ச்சி ஆகிறான், டாக்டரின் மகள், ஒரு பிங்க் கலர் புடவை கட்டிய ஆன்டி தான் கையை பேனில் விட்டதாக சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்கிறான். இதையடுத்து, மாயா நிச்சயதார்த்த போட்டோவில் பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி கார்த்திக் கண்ணில் படாமல் எடுத்து வந்துவிடுகிறேன் என்று வீட்டுக்கு வந்து யாருக்கும் தெரியாமல் போட்டோவை எடுத்துவிடுகிறாள்.
பின் அந்த போட்டோவை தீயில் போட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து கிளம்ப, பாதி எறிந்த போட்டோ காற்றில் பறந்து வந்து கார்த்தியின் கால் அருகே விழ அதை எடுத்து பார்த்த கார்த்திக் இது அந்த போட்டோ தானே என்று சந்தேகம் அடைகிறான். போட்டோவை எடுத்துக்கொண்டு மயில்வானத்திடம் போகும் கார்த்திக், அந்த போட்டோவில் இருப்பவர்கள் தான் 3வது எதிரி என்று சொல்ல, மயில்வானம் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அடுத்து, மாயா இப்போ கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், நாம் தேடிய 3வது எதிரி இவங்க நான் என்றும், அது மட்டுமில்லை மாயா கர்ப்பமாக இருப்பதாக கார்த்திக் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடையும் மயில்வாகனம், இந்த கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று கேட்க, அதுதான் எதுவுமே தெரியவில்லை என்று புலம்புகிறான். மறுபக்கம், மகேஷ் மாயாவை கொஞ்சிக்கொண்டு இருக்க, மகேஷ் இனிமேலும், நீ இப்படியே செய்து கொண்டு இருந்தால் சரிப்பட்டு வராது, ஒழுங்கா ரேவதியை கல்யாணம் பண்ற வேலைய பாரு, கார்த்திக்கிற்கு நம்ம மேல சந்தேகம் வந்து இருக்கு, எல்லாருக்கும் விஷயம் தெரிவதற்குள் கல்யாணத்தை பண்ணிட்டு சொத்தை ஆட்டைய போடவேண்டும் என எச்சரிக்கிறாள். அது மட்டுமில்லாமல் கருத்தடை மாத்திரைகள் தீர்ந்து விட்டது அதை வாங்கி வருமாறு கூறுகிறாள்.
கருத்தடை மாத்திரை: இந்த நேரம் கார்த்திக் மாயா வீட்டிற்கு வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வீடு முழுவதும் நோட்டமிட கார்த்தி கையில் ஒரு மாத்திரை ஸ்ட்ரிப் கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப்புக்கு கொண்டு வந்து விசாரிக்கும் போது அது கருத்தடை மாத்திரை அட்டை என சொல்ல அதிர்ச்சி அடைகிறார். அப்போது தான் கார்த்திக்கிற்கு மாயாவை ஒரு முறை ஹாஸ்பிடலில் பார்த்த ஞாபகம் வருகிறது. ஆனால் அப்போது மாயா தலைவலி காரணமாக ஹாஸ்பிடலுக்கு வந்ததாக சொன்னதையும் கார்த்தி நினைத்து பார்க்கிறான்.
ஆசிரமம் வரும் ரேவதி: மறுபக்கம் ரேவதி ஒரு ஆசிரமத்தில் வந்து அங்கு அங்கு தீபா என்ற குழந்தையை பார்க்கிறாள். அந்த குழந்தை ரேவதியை பார்த்ததும் அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என்று சொல்லி கட்டியணைத்து அன்பை பரிமாறுகிறாள். இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல உன்ன என் கூடவே கூட்டிட்டு போயிடுவேன் என்று ரேவதி அந்த குழந்தைக்கு வாக்கு கொடுக்கிறாள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தூங்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











