கர்ப்பத்தை கலைச்சிட்டியா? பணம் கேட்டு மிரட்டும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: ரேவதியின் நிச்சயதார்த்த ஆல்பத்தில் இருந்த போட்டோவை யாருக்கும் தெரியாமல் எடுத்து எரித்துவிட, அது பாதி எரிந்த நிலையில், கார்த்திக்கின் கையில் கிடைத்துவிடுகிறது. இதையடுத்து, கார்த்திக் மாயா வீட்டிற்கு வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வீடு முழுவதும் நோட்டமிட கார்த்திக் கையில் ஒரு மாத்திரை ஸ்ட்ரிப் கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப்புக்கு கொண்டு வந்து விசாரிக்கும் போது அது கருத்தடை மாத்திரை என சொல்ல அதிர்ச்சி அடைகிறான். அப்போது தான் கார்த்திக்கிற்கு மாயாவை ஒரு முறை ஹாஸ்பிடலில் பார்த்த ஞாபகம் வருகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இந்த விஷயத்தை கார்த்திக் மயில்வாகனத்திடம் சொல்ல, என்ன மாயா இவ்ளோ மோசமானவளா இருக்கிற அதே போலத்தான் அந்த மகேஷும் தப்பானவனா இருப்பான். இதனால இந்த கல்யாணத்தை நம்ம நிறுத்துறது தான் நல்லது. இல்லனா ரேவதியோட வாழ்க்கை தான் வீணா போகும் என்று மயில்வாகனம் சொல்ல,அப்போது, கார்த்திக் மாயா தப்பானவனு தெரிஞ்சு போச்சு. ஆனால் மகேஷ் தப்பானவனா இருந்தா மட்டும் இந்த கல்யாணத்தை நிறுத்தலாம் இல்லனா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று சொல்கிறான்.

தீபாவை அழைத்து செல்வேன்: மறுபக்கம் ரேவதி ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தை தூங்கியதும் இன்னும் கொஞ்ச நாள் தான். தீபாவை நான் என்னுடனே வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறேன். இன்னும் ஒரு வாரத்துல மகேஷுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்க இருக்கிறது. அவர்கிட்ட தீபா இந்த விஷயத்தை சொல்லிட்டு, கண்டிப்பா என்னோட குழந்தை தீபாவை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அதுவரைக்கும் கொஞ்சம் நல்லபடியா பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு தீபா அங்கிருந்து கிளம்புகிறாள்.
கர்ப்பத்தை கலைச்சிட்டியா? வீட்டில், கார்த்திக் ஒரு திட்டம் போட்டு ரகசிய நம்பரில் இருந்து மாயாவுக்கு போன் போட்டு பேசும் சொல்கிறான். இதையடுத்து, மயில்வாகனம் மாயாவுக்கு போன் போட்டு நீ யாருனு எனக்கு நல்லா தெரியும்.. கொழுந்தன் கூட ஜாலியா இருந்து கர்ப்பம் ஆகிட்டு இப்போ கர்ப்பத்தை கலைத்து விட்டாயா? டாக்டர் மல்லிகாவை தெரியுமா என்று கேட்க மாயா அதிர்ச்சி அடைந்து போனை கட் செய்து விடுகிறாள். மீண்டும் போன் செய்யும் மயில்வாகனம் ஒரு லட்சம் பணத்தை கொடுத்தால் இந்த விஷயத்தை யாரிடம் சொல்லாமல் இருப்பேன் என்று மிரட்ட மாயா ஃபோனை வைக்கிறாள். பிறகு மகேஷிடம் சொல்லி பணத்தை கொடுத்து இந்த விஷயத்தை முடிக்க முடிவெடுக்கிறாள்.

சரியான கேடி மாயா: மகேஷ் பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்க மாயா, ரேவதியை சந்தித்து கல்யாண செலவுக்கு பணம் தேவைப்படுவதாக சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் கேட்க ரேவதி மாயாவை அழைத்துச் சென்று சாமுண்டீஸ்வரி முன்னாடி நிறுத்தி இவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொடுங்க என்று சொல்கிறாள். மயில்வாகனம் மற்றும் கார்த்திக் நம்ம பணத்தை வாங்கி நம்ம கிட்டயே கொடுக்கப் போறாங்க என நினைத்துக் கொள்கின்றனர். மயில்வாகனம் இவர் பெரிய கேடியா இருக்கா நாம ஒரு லட்சம் கேட்டா இவ இங்க இரண்டு லட்சம் கேட்டு வாங்கி ஆட்டைய போட பாக்குறா என சொல்கிறான்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











