சிதம்பரத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் அடுத்து நடக்கப்போவது என்ன?
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இதுவரை, கார்த்தியும் இளையராஜாவும் பல்லவி யார் என்பதை பார்ப்பதற்காக ஆசிரமத்துக்கு வந்து கொண்டிருக்க இவர்களை வழி மறித்த, ரவுடிகள் அவர்களை தாக்கிவிடுகின்றனர். இதில் இருவரும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
ஆசிரமத்தில் தீபா படுவதற்காக தயாராக மருத்துவமனையில் கண்திறக்கும் ஆசிரமத்துக்கு கிளம்பி வருகிறான், கொட்டும் மழையில் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் போது திடீர்ன்னு ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்க குடையை எடுத்து கொண்டு கார்த்திக் நடந்தே வருகிறான். அப்போது, பல்லவியின் குரலை கேட்டு மகிழ்ச்சி அடையும் கார்த்திக் யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்து பல்லவி பாடுவதை பார்க்கிறான்.

அப்போது, தீபா தான் பல்லவி என்பதை தெரிந்து அதிர்கிறான். நாம ரசித்த குரலுக்கு சொந்தக்காரி தனது மனைவி தான் என்பது அறிந்து சந்தோஷப்படுகிறான். பாடி முடித்து தீபா வீட்டிற்கு கிளம்ப, உண்மை தெரிந்த விஷயம் தெரிய கூடாது என மறைந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

கோபடப்படும் கார்த்தி: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தீபா தான் பல்லவி என்பதை கார்த்தி கோபத்துடன் நேராக தீபா வீட்டிற்கு வந்து தர்மலிங்கத்திடம் இவ்வளவு நாளா தீபா பாடிட்டு இருந்த விஷயத்தை எதுக்கு என்கிட்ட இருந்து மறைச்சீங்க இது ரொம்ப பெரிய தப்பு என்று சொல்ல அவர் நீங்க கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு ஆனா நடந்த விஷயங்களை முழுசா கேளுங்க என்று ராஜஸ்ரீ சத்தியம் வாங்கியது, தம்பிக்காக பாடுவது என அனைத்து விஷயங்களையும் சொல்கிறார்.
ஷாக்கான இளையராஜா: இனியனும் மாமா நீங்க அக்காவை தப்பா நினைக்காதீங்க உங்களுக்கு கோபம் இருந்தால் என்னை கூட அடிச்சுக்கோங்க என்று சொல்ல கார்த்திக் சமாதானமாகி அங்கிருந்து கிளம்பி வருகிறான். இளையராஜாவிடம் பல்லவியாக பாடிக் கொண்டிருப்பது என்னுடைய மனைவி தீபா தான் என்று சொல்ல அவனும் ஷாக் ஆகிறான்.

தீபா பதிலடி: மேலும் கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லப் போவதாக சொல்ல இதனால் தீபாவுக்கு பிரச்சனை வராதா என்று இளையராஜா கேட்க இல்ல தீபா எவ்வளவு நாளா சுமந்திருந்த சுமையை இறக்கி வைக்கட்டும் என கூறுகிறான். மறுபக்கம் மீண்டும் தீபாவை வழிமறிக்கும் சிதம்பரம் தனக்காக பாட கூப்பிட தீபா முடியாது என்று மறுக்க கார்த்தி இடம் பல்லவி நீ தான் என்ற உண்மையை சொல்லிவிடுவேன் என மிரட்ட போய் சொல்லுங்க என்று தீபா பதிலடி கொடுக்கிறாள்.
கார்த்திக்கிற்கு தெரிந்த உண்மை: பிறகு மீனாட்சி அந்த ஆள் பொய் சொல்லிட போறாரு என்று சொல்ல பொய் சொல்லட்டும் அப்போதாவது அவருக்கு விஷயம் தெரியும் நானே அவரிடம் சொல்லலாம் என்று தான் இருக்கிறேன் என்று சொல்கிறாள். அதேபோல் சிதம்பரம் கார்த்தியை சந்தித்து பல்லவி தீபா தான் என்ற உண்மையை உடைக்க இது எனக்கே தெரியும் என்று கார்த்திக் அதிர்ச்சி கொடுக்கிறான்.

ஜாதகத்தில் பிரச்சனை: நீங்க என்னோட மியூசிக் கேரியரை கெடுக்க என்னென்னமோ பண்ணுங்க இனிமேல் உங்களை நான் அழிக்கிறேன் என்று கார்த்திக் சவால் விட சிதம்பரம் அங்கிருந்து ஆவேசத்துடன் கிளம்பி வரும்போது வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு கார் ஆக்சிடென்ட் ஆகிறது. அதன் பிறகு அபிராமி கார்த்திகை ஜாதகத்தை கொண்டு பொய் ஜோசியர் ஒருவரிடம் ஜோசியம் கேட்க அவர் இப்போதைக்கு நேரம் சரியில்லை அவருடைய மனைவி தொடர்ந்து 52 நாட்கள் விளக்கு போட வேண்டும் தவறினால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











